பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/413

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

409


“சென்ற ஞாயிற்றுச் செல் சுடர் அமையம்” (15 - 203) என்று அடிகள் பாடியுள்ளார். இந்த நேரத்தை மாலை 6 மணி என்றே வைத்துக் கொள்வோம். விரைந்து உணவுப் பண்டங்கள் தரப்பட, கண்ணகி உணவு ஆக்கிக் கோவலனை உண்ணச் செய்தது முன்னிரவு 7 மணியாகத் தானே இருக்க முடியும். உணவுண்ட நேரத்தைக் கொலையுண்ட நேரம் எனல் எவ்வாறு பொருந்தும்?

செங்கண்

மற்றும் - இந்திர விழவூ ரெடுத்த காதையில் “கண்ணகி கருங்கணும்” (237) என்று பாடிய இளங்கோ, துன்ப மாலைக் காதையில் ‘செங்கண் சிவப்ப அழுதான்’ (33) என்று கூறியுள்ளார்; உடலுறவு கொண்டதால் சிவந்த கண் என்ற பொருளில் செங்கண் என்றார்; கோவலனை இழந்ததால் அந்தச் செங்கண் மேலும் சிவந்தது - என்று வீரபத்திரன் கூறுகிறார். அவர் கூறியுள்ளபடி, முதல் நாள் பிற்பகல் 4-30 மணியளவில் புணர்ந்ததால் சிவந்த கிண், மறுநாள் மாலை வரை சிவப்பாகவே இருந்திருக்குமோ? ஒரு முன்ற புணரின் 24 மணி நேரம் கண் சிவப்பாயிருப்பது உலகியலில் யாருக்கோ - தெரியவில்லை. காடு காண் காதையில் பெண்ணின் கண்ணை, ‘செவ்வரி ஒழுகிய செழுங்கடை மழைக் கண்’ (184) என்று இளங்கோ குறிப்பிட்டுள்ளார். எனவே, கண்ணகியின் செங்கண்’ என்பதற்குச் ‘சிவந்த அரி பரந்த கண்’ என்று பொருள் கொள்ளலாகாதர்?

எனவே, வீரபத்திரன் கூற்று சிறிதும் பொருந்தாது. அங்ஙனமெனில், காலை - மாலை என்பதற்கு உரிய பொருத்தமான தீர்வு யாது? தீர்வு உள்ளது; வருமாறு:

உரிய தீர்வு.

புணர்ச்சி மயக்கத்தால் கோவலன் பூமாலை கண்ணகியின் கூந்தலில் குறி பார்த்து விழுந்து விடவில்லை.