பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/422

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

418

சுந்தர சண்முகனார்


இதை மாதவியின் முன் பாடுவதால் என்ன பயன்? இச் செய்தி கண்ணகியை எட்டுமா-என்ன? நான் யாருடன் வேண்டுமானாலும் புணரலாம் என்னும் பொருள்படக் கூறுவதன் வாயிலாகத்தான் கண்ணகியின் சிறப்பை மாதவிக்கு அறிவிக்க வேண்டுமா என்ன?

புதுக் கண்டுபிடிப்பு

இங்கே, இதன் தொடர்பாகக் ‘கானல் வரியா? கண்ணீர் வரியா?’ என்னும் தனியொரு நூல் எழுதிய பாவலர் மணி ஆ. பழநி, காவேரி கங்கை-கன்னி என்பனவற்றிற்குப் புதுப் பொருள் கண்டுபிடித்துள்ளார். அதாவது, - கோவலன் மாதவியின் தோழியாகிய வயந்தமாலையுடனும் உடலுறவு கொண்டு வருகின்றானாம்; இது மாதவிக்குப் பிடிக்க வில்லையாம்; எனவே, சோழன் கங்கையையும் கன்னியையும் புணர்ந்தாலும் காவேரி புலவாதது போல், நான் வயந்த மாலையுடன் புணர்ந்தாலும் நீ (மாதவி) புலத்தலாகாது - என மாதவிக்கு உணர்த்துவதற்காகத்தான் இவ்வாறு கோவலன் பாடினான் - என்பது ஆ. பழநி அவர்களின் புதுக் கண்டுபிடிப்பு. இன்னும் சிலர், கோவலன் வயந்த மாலை இணை (ஜோடி) பற்றிக் கூறியுள்ளன. வருமாறு:

“கோவலன் வரம்பின்றி மாதவிக்குத் தோழியாம் வயந்தமாலை போன்றோரிடமும் தொடர்பு கொண்டு வாழ்ந்திருக்கின்றான். அதனால் தான் மயக்குத் தெய்வம் அந்த வயந்தமாலை வடிவுகொண்டு தோன்றித் தான். கோவலனிடம் வந்ததற்குரிய காரணத்தைத் தெளிவாக அவன் நம்புமாறு கூறுகின்றது” என்று திரு கு. திருமேனி அவர்கள் தமது ‘கோவலன்’ என்ற நூலில் எழுதியுள்ளார்.

“கோவலன் வயந்தமாலை தொடர்பு பற்றிக் கூறும் பொழுது வயந்த மாலையிடமே கோவலனுக்குக் காமவழிப்பட்ட தொடர்பு உண்டு என்பதையும்