பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/423

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

419


உய்த்துணரச் செய்வார் அடிகள்” (அடிகள் = இளங்கோ) என்று திரு எஸ். இராமகிருட்டிணன் அவர்கள் தமது ‘இளங்கோவின் பாத்திரப் படைப்பு’ என்னும் நூலில் எழுதியுள்ளார்.

தடை விடைகள்

இன்னோரின் கருத்துகளையும் துணைக்கொண்டு, ஆ. பழநி, கோவலன் வயந்த மாலையையே கங்கையாகவும் கன்னியாகவும் உருவகித்துப் பாடினான் என்று கூறும் தமது கருத்துக்கு அரணாக அவர் கூறும் காரணங்களும் அவற்றிற்கு உரிய என் மறுப்புகளும் வருமாறு:

காரணம் 1: கோவலன் காமம் மிகுந்தவன்; இளமையிலேயே ஒழுக்கம் தவறியவன்; பரத்தையரோடு பொழுது போக்கியவன்; மாதவியின் பணிப்பெண்களையும் விட்டு வைக்காதவன்; மதுரை ஊரைச் சுற்றிப்பார்க்கச் சென்றபோது வேசியர் தெருக்களில் நீண்ட நேரம் சுற்றியவன் சிலம்புப் பாடல் சான்றுகள்:

“குரல்வாய் பாணரொடு நகரப் பரத்தரொடு
திரிதரு மரபிற் கோவலன்”
(5:200,201)

“சலம்புணர் கொள்கைச் சலதியோ டாடிக்
குலம்தரும் வான்பொருள் குன்றம் தொலைந்த
இலம்பாடு காணுத்தரும் எனக்கு”
(9:69-71)

எனவே, இத்தகைய பழக்கம் உள்ள கோவலன் வயந்தமாலை போன்றோருடன் தொடர்பு கொண்டது நடக்காத தன்று.

மறுப்பு

காமத் திருவிளையாடல் புரியும் கோவலன் வயந்த மாலையை மட்டும் உள்ளத்தில் கொண்டு பாடினான் என்று எவ்வாறு கூறமுடியும்? மற்ற பெண்களை எண்ணிக்