பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

41


வேட்டுவ வரி

வேட்டுவ வரிப் பகுதியில், கொற்றவைக்கு வழங்கும் பல்வேறு பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை:

“மதியின் வெண்தோடு சூடும் சென்னி
நுதல் கிழித்து விழித்த இமையா நாட்டத்துப்
பவள வாய்ச்சி தவளவாள் நகைச்சி
நஞ்சுண்டு கறுத்த கண்டி வெஞ்சினத்து
அரவுநாண் பூட்டி நெடுமலை வளைத்தோள்
துளை எயிற்று உரகக் கச்சுடை முலைச்சி
வளையுடைக் கையில் சூலம் ஏந்தி
கரியின் உரிவை போர்த்து அணங்காகிய
அரியின் உரிவை மேகலை யாட்டி
சிலம்பும் கழலும் புலம்பும் சீறடி
வலம்படு கொற்றத்து வாய்வாள் கொற்றவை
இரண்டுவே றுருவில் திரண்டதோள் அவுணன்
தலைமிசை கின்ற தையல் பலர் தொழும்
அமரி குமரி கவுரி சமரி
சூலி லிே மாலவற்கு இளங்கிளை
ஐயை செய்யவள் வெய்யவாள் தடக்கைப்
பாய்கலைப் பாவை பைங்தொடிப் பாவை

ஆய்கலைப் பாவை அருங்கலப் பாவை” (54-71)

என்னும் பெயர்கள் இப்பகுதியில் வழங்கப்பட்டுள்ளன. இவற்றுள், மதிசூடும் சென்னி, நுதல் நாட்டத்து (நெற்றிக் கண்) நஞ்சுண்ட கண்டி (நீலகண்டன்), நெடுமலை வளைத்தோள் (மேருமலையைச் சிவன் வில்லாக வளைத் தான்), சூலம் ஏந்தி (சிவன்), கரியின் உரிவை போர்த்து (சிவன் யானைத்தோல் போர்த்தமை), அரியின் உரிவை (சிவனுக்குப் புலித்தோல் ஆடை), என்னும் பெயர்களை நோக்குங்கால், சிவனின் தேவியாகிய சிவையைக் (உமா