பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

சுந்தர சண்முகனார்


தேவியைக்) கொற்றவையாக கூறப்பட்டிருக்கும் குறிப்பு தோன்றுகிறது. இளங்கோ அடிகள் இவ்வளவு பெயர்களையும் நினைவில் வைத்துத் தந்திருப்பது வியப்பு.

கொன்றையும் துளவமும்

கொன்றை மலரும் துளசியும் இணையத் தொடுத்த மாலையணிந்து அரக்கர் அழிய அமரரைக் காத்துக் குமரிக் கோலத்துடன் கொற்றவை வென்றிக் கூத்தாடினாளாம்.

“கொன்றையும் துளவமும் குழுமத் தொடுத்த
துன்று மலர்ப் பிணையல் தோள்மேல் இட்டாங்கு
அசுரர் வாட அமரர்க்கு ஆடிய

குமரிக் கோலத்துக் கூத்துள் படுமே”
(10-ஆம் பாடல்)

இங்கே, சிவனுக்கு உரிய கொன்றை மலரும் திருமாலுக்கு உரிய துளசியும் இணையத் தொடுத்த மாலை அணிந்ததாகக் கூறியதன் வாயிலாக, சைவ-வைணவ வேறுபாடு அற்ற பொது நோக்கைக் காணலாம். “அரியும் சிவனும் ஒண்ணு (ஒன்று) - அறியாதவர் வாயில் மண்ணு” என்னும் மக்களின் பழமொழி இங்கே பளிச்சிடுவதைக் காணலாம்.

மற்றும் வேட்டுவ வரியின் இறுதியிலும் இத்தகைய கருத்து இடம்பெற்றுள்ளது. யாரும் உண்ணாத நஞ்சைக் கொற்றவை உண்டு தேவர்க்கு அருள் புரிந்தாளாம்; மேலும், தன் மாமனாகிய கம்சனது சூழ்ச்சியால் ஏற்பட்ட மருதமரங்களை ஒடித்தாளாம்; மாமன் அனுப்பிய உருளும் வண்டியை உதைத்து அழித்தாளாம்.

“உண்ணாத நஞ்சுண்டு இருந்தருள் செய்குவாய்”(22-1)
“மருதின் நடந்து கின் மாமன் செய் வஞ்ச

உருளும் சகடம் உதைத்தருள் செய்குவாய்” (22:3,4)