பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பதிப்புரை


நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரத்தின் சுவையை, முனைவர் சுந்தர சண்முகனார் அவர்கள் நீண்ட நாட்கள் செய்த ஆராய்ச்சியின் விளைவாக இந்நூல் வடிவில் தமிழ் அறிந்த மக்களுக்கு வழங்கியுள்ளார்கள்.

சிலப்பதிகார ஆசிரியராகிய இளங்கோவடிகளின் காப்பியச் சுவையையும் கவித் திறத்தையும் பொருத்தமான பாத்திரப் படைப்புகளையும் விருவிருப்பான கதை ஒட்டத்தையும் இந்நூலின் மூலம் சிறப்பாகக் காண முடிகிறது.

முத்தமிழ்க் காப்பியமான சிலப்பதிகாரத்திற்குச் சிறந்த தொரு திறனாய்வு நூல், ஒரு புதுப் படைப்பிலக்கியம் போலவே படைக்கப்பட்டுள்ளது.

உரைநடை வடிவில் நூல் அமைந்துள்ளதால் எல்லோரும் இதனைப் படித்துணரலாம். சிலப்பதிகாரச் செய்யுள் பகுதிகளுடன் அங்கங்கே மேற்கோள் காட்டிக் காப்பியத்தின் சாரத்தைப் பேராசிரியர் சுந்தர சண்முகனார் அவர்கள் இனிய எளிய நகைச்சுவையும் கலந்த தமிழில் மக்களுக்கு எடுத்து இயம்பியுள்ளார்கள்.

சிலப்பதிகாரத்திற்குக் கிடைத்துள்ள சிறந்த இந்த ஆய்வு நூலைப் படிப்பவர்கள் சிலப்பதிகாரம் முழுவதையும் படித்துச் சுவைக்க வேண்டுமென்ற ஆவல் கொள்வார்கள் என்பது உறுதி.

காப்பியத்தில் உள்ள செம்பொருளை, ஆசிரியர் சுந்தர சண்முகனார், 'மூவேந்தர் காப்பியம்' முதல் 'சில சிக்கல்