பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5. காப்பியக் கட்டுக்கோப்பு

இன்னின்னவை அமைந்திருப்பது காப்பியமாகும். இவ்வாறிருப்பது சிறு காப்பியம் - அவ்வாறு இருப்பது பெருங் காப்பியம் - என்றெல்லாம் வரையறைகளும் கூறப்பட்டுள்ளன. ஒவ்வொருவர் ஒவ்வொரு விதமாகக் கூறலாம். எவரும் எந்த வரையறையையும் கட்டாயப்படுத்த இயலாது. இன்றியமையாத பெரும்பாலான அமைப்புகள் இருப்பின் சரிதான். இந்த அடிப்படையுடன், சிலப்பதிகாரத்தில் உள்ள காப்பியக் கட்டுக்கோப்புக் கூறுகள் சில காண்பாம்:

வாழ்த்து:- திங்களைப் போற்றுதும், ஞாயிறு போற்றுதும், மாமழை போற்றுதும், பூம்புகார் போற்றுதும் என்பனவற்றைக் கடவுள் வாழ்த்து - வணக்கம்போல் கொள்ளலாம். மங்கலமாகத் தொடங்கும் இந்தப் பகுதிக்கு ‘மங்கல வாழ்த்துப் பாடல்’ என்னும் பெயர் சூட்டப்பெற்றுள்ளது.

வருபொருள் உரைத்தல்:- அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றம், உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்துதல் கிடைப்பது, ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் - என்பன வருபொருள் உரைத்தலாம். பதிகத்தில் பின்னால் வரப் போகிற முப்பது காதைகளையும் குறிப்பிட்டிருப்பதும் அதுவேயாம்.

நால் பொருள்: அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கும் இடம் பெற்றிருத்தல். கவுந்தி, மாடலன், சாரணர் முதலியோர் கூறியன அறம். கோவலன் பொருள் தேட முயலுதல், பாண்டியனது அரசியல், சேரர்களின் போர்