பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

சுந்தர சண்முகனார்


மணம்: கண்ணகி கோவலன் மணம். முடிசூடல்: ஆரியப்படை கடந்த பாண்டியன் நெடுஞ்செழியன் மறைந்த பின், அவன் இளவல் வெற்றிவேல் செழியன் முடிசூடிக் கொண்டமை.

பொழில் நுகர்தல்: கானல் வரி - புகார் மாந்தர்கள் பொழுது போக்கியது. புனல் விளையாடல்: இந்திர விழாவின்போது புனலாடியது . கடலாடு காதைப் புனலாட்டம்.

மதுக்களி = புகார் மக்கள் களித்தமை. பிள்ளை பெறல் கோவலனுக்கும் மாதவிக்கும் மணிமேகலை பிறந்தமை, மாலதியின் மனங்குளிரப் பாசண்டச் சாத்தன் குழந்தையாய்த் தோன்றல், மணிமேகலைக்குப் பெயரிடு விழா.

புலவியில் புலத்தலும் கலவியில் கலத்தலும் கோவலன் மாதவி, பாண்டியன் அவன் மனைவி, புகார் மாந்தர் ஆகியோர் புலவியில் புலந்து கலவியில் கலந்தமை.

மந்திரம்: செங்குட்டுவன் சூழ்வு (மந்திராலோசனை) செய்தமை. தூது: மாதவி வயந்த மாலையையும் கோசிகனையும் கோவலனிடம் தூது அனுப்பியமை.

செலவு - இகல்வென்றி. செங்குட்டுவன் வடபுலம் நோக்கிப் படையெடுத்துச் சென்று வெற்றி பெற்றமை, காப்பிய உட்பிரிவு: முப்பது காதைகள் அமைத்திருப்பது.

மெய்ப்பாட்டுச் சுவை: தொல்காப்பியத்தில் கூறப் பட்டுள்ள நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்னும் மெய்ப்பாட்டுச் சுவைகள் சிலம்புக் காப்பியத்தில் இடம் பெற்றுள்ளன.

நகை: கணவனைப் பிரிந்த கண்ணகி மாமன் மாமியை மகிழ்விக்கப் பொய்ச் சிரிப்பு சிரித்தாள். மாதவியிடமிருந்து