பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

சுந்தர சண்முகனார்


என்று ஒரு குறள் பாடியுள்ளார். ஒரு பிறவியிலேயே முற்பகுதி - பிற்பகுதி என்னாமல், ஒரு பகலிலேயே (ஒரு நாளிலேயே) முற்பகல் - பிற்பகல் என்று தொடர்புறுத்தியுள்ளார். இந்தச் சூழ்நிலையை உண்மையான - மிகப் பெரிய ஊழாகச் சொல்லலாம்.

இவ்வாறாக, ஒரு பிறவியிலேயே முற்பகுதி - பிற்பகுதி, ஒரு பகலிலேயே முற்பகல் - பிற்பகல் என்பன பொருத்தமான ஒருவகைத் தீர்வாகும்.

இதற்கு மற்றொருவகைத் தீர்வும் சொல்லலாம்: நல்லவர்க்கு நல்லதோ-கெட்டதோ, தீயவர்க்குத் தீயதோ - நல்லதோ நடப்பது, இயற்கையாக - தற்செயலாக - யாரும் எதிர்பார்க்காத விதத்தில் நடப்பது ஒரு தீர்வாகும். போக்குவரவு வண்டியில் அகப்பட்டு இறத்தல், புயல், வெள்ளம், நிலநடுக்கம், எரிமலை, போர், கொலை முதலியவற்றால் உடைமையையோ - உயிரையோ இழத்தல் போன்றவை, இயற்கையாக - தற்செயலாக நடக்கும் தீமைகளாகும். பிள்ளையில்லாதவரின் சொத்து கிடைத்தல், குலுக்கல் (இலாட்டரி) சீட்டு போன்றவற்றால் திடீர்ப் பணக்காரர் ஆதல் போன்றவை இயற்கையாக - தற்செயலாகக் கிடைக்கும் நன்மைகளாகும். இவற்றோடு ஊழ்வினை என ஒன்றைக் கொண்டுவந்து, மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சிபோடுவது போல் தொடர்புறுத்துவது பொருந்தாததாகும். இந்த அடிப்படையுடன் சிலப்பதிகாரத்திற்குச் செல்வாம்.

சிலம்பில் பல இடங்களில் ஊழ்வினை வலியுறுத்தப்பட்டுள்ளது. முன்பிறவித் தொடர்புக் கதையும் காட்டப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை அறிவியல் ஆய்வு முறையில் நோக்கின், முற்பகல் செய்தது பிற்பகலில் விளைந்ததாகவும், ஒரு பிறவியிலேயே முன்பாதியில் செய்தது