பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

55


பின்பாதியில் விளைந்ததாகவும், இயற்கையாக - தற்செயலாக நடந்ததாகவும் தெரியவரும். இனி நூலுள் புகுந்து ஒவ்வொன்றாகக் காணலாம்.

பதிகம்

பதிகத்திலேயே ஊழ் வினைக் குறிப்பு உள்ளது. கோவலனுக்கு இருந்த ஊழ்வினையால் பாண்டியன் ஆராயாது கொல்லச் செய்தானம்:

“வினைவிளை காலம் ஆதலின் யாவதும்

சினையலர் வேம்பன் தேரானாகி..” (27-28)

என்பது பாடல் பகுதி. அரசியலில் தவறு இழைத்தோர்க்கு அறமே எமனாகும் - பத்தினியைப் பெரியோரும் ஏத்துவர் ஊழ்வினை விடாது வந்து ஊட்டும் - என்னும் முன்று செய்திகள் சிலப்பதிகாரத்தால் தெரியவருமாம்.

“அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவதூஉம்
உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்

ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பது உம்...”

(55, 56, 57)

என்பது பாடல் பகுதி.

கானல் வரி

கானலில் மாதவி யாழ் மீட்டிப் பாடியது வஞ்சகப் பொருள் உடையது என ஐயுற்ற கோவலன், தனது ஊழ்வினையும் சேர்ந்து கொள்ள, முழுமதிபோன்ற முகமுடைய மாதவியைப் பிரிந்தான். பாடல்:

“யாழிசைமேல் வைத்துத்தன் ஊழ்வினை
    வந்து உருத்த தாகலின்
உவவுற்ற திங்கள் முகத்தாளைக்

    கவவுக்கை ஞெகிழ்ந்தனனால்” (52 : 4, 5)

என்பது பாடல் பகுதி.