பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தீர்வுகள்' வரையிலான முப்பத்தொரு தலைப்புகள் இட்டுச் சுவைபெற விளக்கியுள்ளார்.

ஆசிரியர் தம் கருத்துக்கு அரணாகப் பல நூல்களிலிருந்து மேற்கோள்கள் எடுத்துக் காட்டியிருப்பதன்றி, உலகியல் அனுபவ நிகழ்ச்சிகள் பலவும் தந்து தம் கருத்துகளை நிறுவிச் சாதனை படைத்துள்ளார்.

இந்நூலை அளித்துள்ள முனைவர் சுந்தர சண்முகனார் தமிழ் மக்களின் போற்றுதலுக்கும் பாராட்டுக்கும் உரியவராவார்.

தமிழ் மக்கள் இந்நூலைப் பெரிதும் வரவேற்பார்கள் என்ற நம்பிக்கையில் வானதி பதிப்பகத்தின் மூலம் வெளியிட்டுள்ளேன். ஏற்று மகிழுங்கள்.

வானதி ஏ. திருநாவுக்கரசு