பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு !

61


நீர்ப் படைக் காதை

கனக விசயர் தலையில் கல்லேற்றி வந்த மன்னன் சேரன் செங்குட்டுவனிடம் மறையவன் மாடலன் கோவலன் வரலாறு கூறினான்: புகார்க் கடற்கரையிலே, பழைய தீய ஊழ்வினை வந்து உருத்ததால், மாதவி பாடிய வரிப் பாடலில் மாற்றுப் பொருள் கண்ட கோவலன் அவளை விட்டுப் பிரிந்து கண்ணகியிடம் வந்து சேர்ந்தான் என்று கூறினான். பாடல்:

“மாதவி மடங்தை வரிகவில் பாணியொடு
ஊடல் காலத்து ஊழ்வினை உருத்தெழக்
கூடாது பிரிந்து குலக்கொடி தன்னுடன்

மாட மூதூர் மதுரை புக்கு ...” (58-61)

நடுகல் காதை

செங்குட்டுவனிடம் அறவேள்வி செய்யுமாறு மாடலன் தூண்டிய போது, பின் வரும் கருத்தைக் கூறினான். முன் செய்த ஊழ் வினையின் வழிப்படி உயிர் இயங்கும் என்பது மெய்யாளர் மொழிந்த மேலான கருத்தாகும் - என்றான்.

பாடல்:

“செய்வினை வழித்தாய் உயிர்செலும் என்பது

பொய்யில் காட்சியோர் பொருளுரை” (167, 168)

ஈண்டு இது, புறநானூற்றில் உள்ள

“நீர்வழிப் படுஉம் புணைபோல் ஆருயிர்
முறைவழிப் படுஉம் என்பது திறவோர்

காட்சியின் தெளிந்தனம்” (192:9-11)

என்னும் பாடல் பகுதியோடு ஒப்பிட்டு நோக்கத்தக்கது.

வரம் தரு காதை

மாலதி என்பாள் மாற்றாள் குழந்தைக்குப் பால் சுரந்து ஊட்டினாளாம். பழைய தீய ஊழ் வினை உருத்த-