பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு

65


பின்னால் பகலில் நடக்கப்போவதை முன்னமேயே உறக்கத்தில் அறிவிக்கும் ஒருவகைக் குறிப்பே கனவு என்பது.

கனவுகள் மக்களின் விருப்பு - வெறுப்புகளைக் குறிக்கின்றன என்பது பிளேட்டோ போன்றோரின் கருத்து.

உறங்கும்போது சில உள் உறுப்புகள் வேலை செய்து துண்டுவதால் கனவுகள் ஏற்படுகின்றன — என்பது அரிஸ்ட்டாட்டில் (Aristatle) போன்றோரின் கருத்தாகும்.

இவ்வாறு பல்வேறு கருத்துகள் பலரால் சொல்லப்படினும், ஒவ்வொருவரும் தாம் கண்ட கனாக்களின் துணை கொண்டு-அதாவது தமது சொந்தப் பட்டறிவைக் கொண்டு எந்தக் கருத்து சரியானது என்று உய்த்துணரலாம்.

இந்த அடிப்படையுடன் சிலப்பதிகாரத்திற்கு வருவோம். முப்பெருங் கனவு நிகழ்ச்சிகள் முன்று காதைகளில் கூறப்பட்டுள்ளன. அவற்றை முறையே ஒவ்வொன்றாய்க் காண்பாம்:

1. கனாத் திறம் உரைத்த காதை

புகாரில் இருந்தபோது கனா கண்ட கண்ணகி அதனைத் தேவந்தி என்னும் தன் பார்ப்பனத் தோழியிடம் பின் வருமாறு கூறுகிறாள்:

யான் கண்ட கனவால் என் நெஞ்சம் ஏதோ ஐயுறுகின்றது. என் கணவர் என் கை பற்றி எங்கோ அழைத்துச் சென்றார். இறுதியில் ஒரு பெரிய நகரத்தை அடைந்தோம். அங்கே யாரோ எங்கள் மேல் பொய்க் குற்றம் சுமத்திப் பொய்யுரை யொன்றை இடுதேளிட்டுக் கூறினர். அதனால் என் கணவர் கோவலனுக்குத் தீங்கு நேரிட்டது என்று பலர் சொல்லக் கேட்டேன். அது பொறாமல், அவ்வூர் அரசன் முன் சென்று வழக்குரைத்தேன். அதனால்,