பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

73


போல் பொங்கிற்று. திங்களைப் பிளந்து கொண்டு விண் மீன்கள் எழுந்தன. வானம் குருதி மழை பொழிந்தது. தண்டம், ஆழி (சக்கரம்), வாள், வில் என்னும் படைக் கலங்கள் ஒன்றோடொன்று போர் புரிந்து கொண்டன.

மங்கையரின் தாலிகள், கையில் வாங்குபவர் இல்லாமலேயே தாமாக அறுந்து மார்பகத்தில் விழுந்தன. மயன் மகளாகிய (இராவணனின் மனைவி) மண்டோதரியின் கூந்தல் சரிந்தது. இரண்டு சீயங்கள் (சிங்கங்கள்) மலையிலிருந்து புலிக் கூட்டத்தை உடன் அழைத்துக்கொண்டு வந்து யானைகள் வாழும் காட்டிற்குள் புகுந்து யானைகளை வளைத்து நெருக்கிக் கொன்றன. வனத்தில் இருந்த மயில் ஒன்று வனம் விட்டு அப்பால் சென்றது. (இரண்டு சீயங்கள் = இராம இலக்குமணர்கள், மலைப் புலிகள் = வானரப் படைகள். யானைகள் = அரக்கர்கள், யானைக்காடு = இலங்கை, மயில் = சீதை)

மேலும் கேள்! ஆயிரம் விளக்குகளின் ஒளியையுடைய ஒரு திரு விளக்கினைத் திருமகள் (இலக்குமி) ஏந்திக் கொண்டு இராவணன் வீட்டிலிருந்து வீடணன் வீட்டிற்குச் சென்றாள். (இராவணன் அழிய, வீடணன் ஆட்சிக்கு வருவான் என்பது குறிப்பு).

இது கம்ப இராமாயணக் கதை. சுந்தர காண்டம் - காட்சிப் படலத்தில் (40 - 53) இதைக் காணலாம். சிவக சிந்தாமணி நூலிலும் இத்தகைய குறிப்பு உள்ளது.

சீவகனைக் கருக்கொண்டிருந்த தாய் தான் கண்ட தீய கனவினைத் தன் கணவன் சச்சந்த மன்னனிடம் கூற, சச்சந்தன் தான் சாகக் கூடும் என்பதை முன்கூட்டி அறிந்து, மயில் பொறியில் அமர்ந்து பறந்து அரண்மனையை விட்டுத் தப்பித்துச் செல்ல முன்கூட்டியே மனைவியைப் பழக்கினா-