பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9. புராணக் கதைகள்

இக்காலத்து அறிவியலார் நம்ப முடியாத புராணக் கதைகள் பல பண்டைய இலக்கியங்கள் பலவற்றில் இடம் பெற்றுள்ளன. இந்த வரிசையில் சிலப்பதிகாரத்திற்கும் பங்கு உண்டு. சில் புராணக் கதைகளை இதிலிருந்து காணலாம்:

அவுணரும் முசுகுந்தனும் (கடலாடு காதை)

அவுணர்கள் முசுகுந்த மன்னனுக்குத் தொல்லை தந்தனர். ஒரு பூதம் தொல்லையினின்றும் அவனைக் காத்ததாம்:

“கடுவிசை அவுணர் கணங்கொண்டு ஈண்டிக்
கொடுவரி ஊக்கத்துக் கோநகர் காத்த
தொடுகழல் மன்னற்குத் தொளைந்தன ராகி
நெஞ்சிருள் கூர நிகர்த்து மேலிட்ட
வஞ்சம் பெயர்த்த மா பெரும் பூதம்
திருந்துவேல் அண்ணற்குத் தேவன் ஏவ

இருந்து பலியுண்ணும் இடனும்..” (7-13)

என்பது பாடல் பகுதி. சுருக்கமாகக் கூறப்பட்டுள்ள இப்பகுதியில் ஒரு பெரிய கதை மறைந்துள்ளது. அதாவது: அமிழ்தத்தைக் கலுழன் கவர்ந்து சென்று விட்டான். இந்திரன் புகார் நகரைத் தான் காப்பதாக ஒப்புக் கொண்ட முசுகுந்த மன்னனிடம் ஒப்படைத்து அவனுக்குத் துணையாக ஒரு பூதத்தை அமர்த்தி விட்டுப் போனான். அவுணர்கள் மன்னனோடு போரிட்டுத் தோற்றனர். பின்னர், அவுணர்கள் இருள் உண்டாகச் செய்யும் ஓர் கணை தொடுத்து எல்லா