பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94

சுந்தர சண்முகனார்



4. பண், தாளம், தூக்கு இவற்றின் விகற்பம் அறிதல். இவற்றின் குற்ற நற்றங்களும் அறிதல்.

5. இயற் சொல் முதலிய நான்கு சொல்லாட்சிகளை அறிதல்.

6. உரு நெகிழாதபடி நிறுத்தல்.

7. நிற்குமானம் நிறுத்திக் கழியுமானம் கழிக்க வல்லவனாதல்.

8. யாழ், குழல், மிடறு ஆகியவற்றின் இசைக்கு இயைய வாசித்தல்.

9. மற்ற கருவிகளின் குறையை நிரப்புதல்-மிகையை அடக்குதல்.

10. கைத் தொழில் அழகு பெறச் செய்து காட்டல் - முதலியன தண்ணுமை (மத்தளம் - மிருதங்கம்) வாசிப் பவனுக்கு இருக்க வேண்டிய இயல்புகளாகும்.

6. குழல் ஆசிரியன் இயல்பு

1. சித்திரப் புணர்ப்பும் வஞ்சனைப் புணர்ப்பும் அறிதல்.

2. பாடலாசிரியனைப் போல் ஒத்த அறிவுடைமை.

3. ஊதும் துளைகளில் சுட்டு விரல் முதலாக விட்டுப் பிடிப்பது ஆரோகணம் - சிறு விரல் முதலாக விட்டுப் பிடிப்பது அவரோகணம்- இவற்றை அறிந்து ஒழுகல்.

4. 103 பண்ணிர்மையும் 14.கோவையும் அறிதல்.

5. முழவு, தண்ணுமை, யாழ், மிடறு (வாய்ப்பாட்டு)இவற்றின் இசைக்கு ஏற்ப ஒத்திசைத்தல்.

6. முதல் நடை, வாரம், கூடை, திரள் என்னும் இயக்கம் நான்கனுள் முதல் நடை தாழ்ந்த நடையாதலாலும் திரள் முருக்கு நடை யாதலாலும் அவற்றை விட்டு, சொல்