சிலை யெழுபது
89
கொள்ளுதலின் இங்கே குடைச் சிறப்புக்குப் பின்வைத்துக் கூறினார்.
அறுசீர்க்கழிநெடிலடி யாசிரியவிருத்தம்.
வெங்கோப மதம்பொழியும் விண்ணவர்கோ னும்பனிகர் வேழ
முண்டோ, பைங்கோலஞ் சேர்கனகப் பஞ்சதரு வனையபா தபமற்
றுண்டோ, இங்கோத வான்சுரபிக் கிணையுண்டோ வன்னிமன்ன
ரெனுமேன் மக்கள், செங்கோலுக் கெதிராங்கோல் செகதலத்தி
லொன்றுண்டோ செப்பு வீரே.
(38)
(இ-ள்) வெம் கோபமதம் பொழியும் விண்ணவர் கோன் உம்பல்நிகர் வேழம் உண்டோ-வெவ்விய கோபத்தோடும் மதம் பொழிதலையுடைய இந்திரனது வெள்ளை யானையை ஒப்பாகும் யானை வேறிருக்கிறதா? பை கனகக்கோலம் சேர்பஞ்சதரு அனைய பாதபம் மற்று உண்டோ- பசும்பொன்னிறங் கொண்ட ஐந்தருக்களை ஒப்பாகும் தரு வேறு இருக்கிறதா? இங்கு ஓது அ வான் சுரபிக்கு இணை உண்டோ- இவ்வியல்பாகவே சொல்லப்படுகிற தெய்வப் பசுவாகிய அக்காமதேனுவை ஒப்பாகும் (பசுவேறு) இருக்கிறதா? (என்பபோல), சகதலத்தில் - பூதலத்தின்கண் மேன்மக்கள் எனும் வன்னிமன்னர் - மேன்மக்களென்று யாவரும் சொல்லாநின் வன்னியரென்னும் அரசர்களது, செங்கோலுக்கு எதிர் ஆம் கோல் ஒன்று உண்டோ - செங்கோலை ஒப்பாகுங் கோல்வேறு வொன்று இருக்கிறதா?, செப்புவீர் - சொல்லுவீர்களாக. எ-று.
கருத்து. வன்னியர்கள் செங்கோலே உலகத்துக்கு முதன்மையுடைய தென்பதாம்.
குடிகள் யாவரும் செங்கோலை தானோக்கவேண்டுமென்பதற்கும், தருமத்துக்கு ஆதி என்பதற்கும் நாயனார் "வானோக்கி வாழு முலகெல்லா மன்னவன் - கோனோக்கி வாழுங் குடி" என்றதனாலும், "அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது மன்னவன் கோல்" என்றதனாலும் உணர்க. மற்றைய கோல்களாவன தீக்கடை-