90
மூலமும் - உரையும்
கோல், நிறைகோல், தாற்றுக்கோல் இவைகள். அடுத்த ௩௯-வது கவியிற் காண்க.
செங்கோல்வண்மைச்சிறப்பு.
செங்கோல் வண்மைச் சிறப்பென்பது:— ஆணை செலுத்துங் கோல்வளத்தின் பெருமை. அது செங்கோலைக் கைக்கொண்டபிறகு வளந் தெரிதலின், இங்கே செங்கோல் சிறப்புக்குப் பின்வைத்துக் கூறினார்.
கொச்சகம்.
வீரசம்பு முனிவேள்வி விளங்கவரு முடிவேந்தர்
சீர்மருவு கரத்தேந்து செங்கோலின் றிறத்தானே
நேரறுதீக் கடைகோலு நிறைகோலு நீடுலகி
லேரடரு முழுகோலு மிடரின்றி யிருப்பதுவே.
(39)
(இ-ள்) வீரசம்பு முனிவேள்வி விளங்க வருமுடி வேந்தர் - வீரத்தைக் கொண்ட சம்பு விருடி யாகத்தில் உலகு விளங்கும்படி அவதரித்த மகுட மன்னர்களது, சீர்மருவு கரத்து ஏந்து செங்கோலின் திறத்தால் - சிறப்புப் பொருந்திய கையினிடத்து ஏந்தா நின்ற செங்கோல் வண்மையால், நேர் அறு தீக்கடைகோலும் - (பிராமணர்களுக்குரிய) ஒப்பில்லாத தீக்கடைகோலும், நிறைகோலும் - (செட்டிகளுக்குரிய) தராசுக் கோலும், ஏர் அடரும் உழுகோலும் - ஏரை நடத்துகின்ற (வேளாளர்களுக்குரிய) தாற்றுக்கோலும், இடர் இன்றி இருப்பது - கெடுதலில்லாமலிருப்பதாகும். எ-று.
கருத்து. வன்னியர்களது செங்கோல் வண்மையால் பிராமணர்களுக்குரிய தீக்கடைகோலும், செட்டிகளுக்குரிய நிறைகோலும், வேளாளர்களுக்குரிய தாற்றுக்கோலும் இடரில்லாது நிற்கின்றன என்பதாம்.
செங்கோனடத்தற்சிறப்பு.
செங்கோ னடத்தற் சிறப்பென்பது:— ஆணைக்கோலை நடத்துதலின் பெருமை, அது செங்கோல் வளத்-