உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிலை எழுபது, 1947.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94

மூலமும் - உரையும்

ரைப், பொற்பத் தொழுஞ்சூத் திரர்தொழிலும் புகலெத் தொழிலு முறை
பிறழ்ந்தே, அற்பத் தொழிலா காதரசாள் வதுபண் ணாட்டார் தந் தொழிலே. (43)

(இ- ள்.) பண்ணாடர் தம்தொழில் - தமிழ் நாடரென்னும் (சேர சோழபாண்டிய) வன்னியர்களது தொழிலானது, கற்பத்து ஒழியா மறை பயிலும் கவின் மேவிய அந்தணர் தொழிலும் - சர்வசம்மார காலத்திலும் அழிவில்லாத வேதங்களைப் பழகும் அழகு பொருந்திய பிராமணர் தொழில்களும், சிற்பத்தொழில் சிற்பியரது தொழில்களும், வைசியர் தொழிலும் - செட்டியர்களது தொழில்களும், உயர்முக்குலத்தோரைப் பொற்பத்தெழும் சூத்திரர் தொழிலும் - (தம்மில்) உயர்ந்த (பிராமண க்ஷத்திரிய வைசியரென்னும்) மூன்று வருணத்தோர்களையும் விலக்ஷணத்தோடும் வணங்காநின்ற சூத்திரர்களது தொழில்களும், புகல் எத்தொழிலும்-இன்னும் சொல்லா நின்ற எவ்வகைப்பட்ட வேறு ஜாதியர்களது தொழில்களும், தினமும் - எந்நாளும், மூறைபிழழ்ந்து - அவரவர் வரன்) முறையினின்றுந்தவறி, அற்பத்தொழில் ஆகாது - அற்பத் தொழிலாகப் போய்விடாது, அரசு ஆள்வது- அரசாளுவதாகும் எ-று, ஏ-ஆசை.

கருத்து. வன்னியர்களது தொழிலானது பிராமணர்களது தொழில்களும். சிற்பியர்கள் தொழிலும், செட்டியர்கள் தொழில்களும், வேளாளர்கள் தொழில்களும், இன்னும் மற்றைய யாவருடைய தொழில்களும் கெடா வண்ணம் அரசாள்வது ஆகும் என்பதாம்.


முத்திரைமோதிரச்சிறப்பு

முத்திரை மோதிரச் சிறப்பென்பது:— முத்திரை மோதிரத்தின் பெருமை. அது தொழினெறி பிறழாமலாளுந் தகைமையோடுந் தரித்தலின், இங்கே தொழினெறி பிறழாமைச் சிறப்புக்குப் பின்வைத்துக் கூறினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலை_எழுபது,_1947.pdf/106&oldid=1862877" இலிருந்து மீள்விக்கப்பட்டது