சிலை யெழுபது
101
பொற்றேர்-அழகிய இரத்தின இரதமும், உதவி-கொடுத்து, படைத்த புகழ் - அடைந்த புகழை, சாற்றல் பாற்றோ- சொல்லும் பகுதியினை யுடையதா? (சொல்வீர்களாக.) எ-று.
கருத்து. ஆதியில் இவ்வன்னியர்கள் திருமங்கையாழ்வாரால் சொல்லிய பல்லவராஜன் வமிசத்தில் தோன்றினவர்களாகி, ஏகாம்பரநாதற்குக் கிரீடம், தேர் முதலியவைகள் கொடுத்துப் புகழ் பெற்றதை இவ்வளவென அளவிடக்கூடாது என்பதாம்.
இதனால், இவ்வன்னியர்கள் விஷ்ணுவாலய சிவாலய தருமங்கள் நிரம்பவும் பிரபலமாக நடத்துகின்றவர்கள் எனக் குறிப்பிட்டார்.
இதில் “வளமருவு மங்கையர்கோன் சொலத்தகு பல்லவராயன் மரபு” என்றதற்கு, திராவிட வேதமாகிய நாலாயிரப் பிரபந்தம் திருமங்கையாழ்வார் திருவாய் மலர்ந்தருளிய,
“சொல்லுவன் சொற்பொரு டானவையாய்ச் சுவை யூறொலி நாற்றமுந் தோற்றமுமாய், நல்லர னாரணன் னான் முகனுக் கிடந்தான் றடஞ் சூழ்ந்தழகாயகச்சி, பல்லவன் வில்லவனென் றுலகிற் பலராய பலவேந்தர் வணங்கு கழற், பல்லவன் மல்லையர்கோன் பணிந்த பரமேச்சுர விண்ணகரமிதுவே”
இதுபோல மற்றைய பாசுரங்களை அந்நூலைக்கொண்டு அறிந்து கொள்க. “ஒளிர் மகுட மணிப்பொற்றேருதவி” என்றதற்கு, ஏகாம்பரச் சம்பன் அல்லது ஏகாம்பரச் செம்பியன் என்னும் பல்லவமகாராஜன் முன்னிலையில் இரட்டைப் புலவர்கள் அரங்கேற்றிய ஏகாம்பரநாதர் உலா “சம்புகுலத் தொருவன் சாற்றுகைக்கா மென்றளித்த - செம்பொன் மணிமகுடம் சேர்வித்து” என்னும் ௬௧-வது கலிவெண்பாவானும், "வடித்த சுடர்வேற்சம்பன் வாழ்மல்லி நாதன் - கொடுத்த திருத்தேர்மேற்கொண்டு" என்-