106
மூலமும் - உரையும்
இவ்வேந்தர்களின் பட்டப்பெயர்க ளாவன; சேரனார், சோழனார்,பாண்டியனார், உடையார், நாயனார், கண்டர்[1], பள்ளிகள், சாமந்தர், பல்லவர், அஞ்சாதசிங்கம், கங்கணவுடையார், மழுவர், பொறையர், அரசுபள்ளி, இராயர், படையாட்சியர், நாயகர், கிடாரங்காத்தவர், நீலங்கிரியார், வாளண்டையார், வீரமிண்டர், வல்லமையுடையார், இராஜாளி, சமுக்ஷியர், தந்திரியார், இரட்டிகள், துரைகள், பண்டாரத்தார், பூபதிகள், பரமேசுவரனார், காளிங்கராயர், சம்புராயர், முதலியவைகள் என்க. இவைபோலும் இன்னும் அநந்தப்பட்டப் பெயர்களை வழக்கிற் கண்டுணர்க.
இராஜசமுகச் சிறப்பு.
இராஜசமுகச் சிறப்பென்பது :— இராஜசமுகத்தின் பெருமை. அது இதயவளத்தினாலாதலின், இங்கே இதய வண்மைச் சிறப்புக்குப் பின்வைத்துக் கூறினார்.
வானோர் வியக்குஞ் சமுகமுது மறையோர் வாழ்த்துஞ் சமுகமலர்த்
தேனூர்ந் திருக்குஞ் சமுகமன்னர் திறைக ளளக்கும் சமுகம்விழி
மானார் நடிக்குஞ் சமுகமதி வல்லோர் துதிக்குஞ் சமுகமொன்னா
ரானா திறைஞ்சுஞ் சமுகம்வன்னி யரசர் சமுக மதுதானே.
(55)
(இ-ள்) வானோர் வியக்கும் சமுகம் - தேவர்கள் சந்தோஷிக்கின்ற சமுகமும், முது மறையோர் வாழ்த்தும் சமுகம் - பழமையாகிய வேதப்பிராமணர்கள் ஆசீர்வாதஞ் சொல்லுகின்ற சமுகமும், மலர்த்தேன் ஆர்ந்திருக்கும் சமுகம் -இலக்ஷீமி நாளு நிறைந்திருக்கின்ற சமூகமும், மன்னர் திறைகள் அளக்கும் சமுகம் - அரசர்கள் கப்பம் என்னும் அரசிறைகளை அளக்கின்ற சமுகமும், விழிமானார் நடிக்கும் சமுகம் - மான்போன்ற விழிகளையுடைய பெண்கள் நடனஞ் செய்கின்ற சமுகமும், மதிவல்லோர் துதிக்கும் சமுகம் - அறிவில் வல்லவர்கள் துதிக்கின்ற சமுகமும், ஒன்னார் ஆனாது இறைஞ்சும் சமுகம் - பகைவர்கள் தமது உயிர் கெடாது நிலை பெறும்படி வணங்குகின்ற
- ↑ இந்த கண்டர் என்னும்பதமே கவுண்டர் என நிற்கின்றது.