110
மூலமும் - உரையும்
ஏந்துபுக ழான்மாலிந் திரன்குகன் வேளெனவன்னி
வேந்துசிறந் திருப்பதையிம் மேதினியே விளம்பிடுமால்.
(59)
(இ-ள்) வன்னிவேந்து வன்னியரென்னும் அரசர்கள், சாந்தம் புகழ் எந்து அரன் எனவும் - சாந்தத்தால் புகழினைக் கொண்ட சிவபிரான் எனவும், இரக்ஷகத்தால் மால் எனவும் காத்தலினால் விஷ்ணு எனவும், தகை பெறு வைபவத்தால் இந்திரன் எனவும் - பெருமையையுடைய வைபவத்தினால் இந்திரன் எனவும், ஆர்ந்த புய பலத்தால் குகன் எனவும் - நிறைந்த புயபலத்தினால் சுப்பிரமணியன் எனவும், அழகு அமைந்த திறத்தால்வேள் எனவும் - அழகு பொருந்திய தன்மையினால் மன்மதன் எனவும், சிறந்திருப்பதை - சிறந்திருக்கின்றதை, இம்மேதினியே விளம்பிடும் - இவ்வுலகமே சொல்லும். எ-று ஆல் - அசை.
கருத்து. வன்னியர்கள் சாந்தத்தால் சிவபிரானெனவும், காத்தலினால் விஷ்ணுவெனவும், வைபவத்தால் இந்திரரனெனவும், புயபலத்தால் சுப்பிரமணியனெனவும், அழகால் மன்மதனெனவும் சிறந்து விளங்குந் தன்மையை இவ்வுலகமே சொல்லுகின்றது என்பதாம்.
கொடைவளத்தின் சிறப்பு.
கொடை வளத்தின் சிறப்பென்பது:— கொடை வளத்தின் பெருமை. அது சாந்தமுதலிய குணங்களோடும் பொருந்திக் கொடுக்கவேண்டியதாதலின், இங்கே சாந்தமுதலியவற்றின் சிறப்புக்குப் பின்வைத்துக் கூறினார்.
அறுசீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்.
வையந் தழைப்ப மறைதழைப்ப மறையோர் புரியு மகம் தழைப்பச்
செய்ய முனிவர் தவந்தழைப்பச் செங்கோ றழைப்பச் சீர்தழைப்ப
பெய்யு முகில்போற் றுங்கவன்யர் கைமா றுகவா மற்பெறுவோர்
கையுந் தழைப்ப மெய்தழைப்பக் கனகம் பொழிவார் காணீரே.
(60)
(இ-ள்) துங்கவன்யர் - உயர்வினையுடைய வன்னியர்கள், வையம் தழைப்ப - உலகு தழைக்கவும், மறை