சிலை யெழுபது
111
தழைப்ப - வேதங்கள் தழைக்கவும், மறையோர் புரியும் மகம் தழைப்ப பிராமணர்கள் செய்யும் யாகங்கள் தழைக்கவும், முனிவர் செய்யுந் தவம் தழைப்ப முனிவர்கள் செய்கின்ற தவங்கள் தழைக்கவும், செங்கோல் தழைப்ப - இவர்களது செங்கோல் தழைக்கவும், சீர் தழைப்ப -அதனால் பல சிறப்புகளும் தழைக்கவும், பெய்யும் முகில்போல் - பொழிகின்ற மேகத்தைப்போல்,கைம்மாறு. உகவாமல் வரும் பயனை விரும்பாது, பெறுவோர் - வாங்குபவர்களது, கையுந் தழைப்ப மெய்தழைப்பக் கனகம் பொழிவார் - கைதழைக்கவும் சரீரந் தழைக்கவும் பொன்னைப் பொழிகிறார்கள், காணீரே - அறியீர்களா? (சொல்வீர்களாக.) எ-று:
கருத்து. வன்னியர்கள் மேகத்தைப்போல வரும் பயனை விரும்பாது, வாங்குபவர்களது கை தழைக்கவும், மெய்தழைக்கவும், பொன்னைப் பொழிகிறார்கள் என்பதாம்..
வள்ளறன்மைச் சிறப்பு.
வள்ளறன்மைச் சிறப்பென்பது:- வள்ளல்தன்மையின் பெருமை. அது கொடுத்தல் வண்மையினாலாதலின், இங்கே கொடைவளத்தின் சிறப்புக்குப் பின்வைத்துக்கூறினார்.
கொச்சகம்.
புள்ளிபல வாயினும்புன் பூசைபுலி யாகாவே
வெள்ளிபல வாயினும்வான் வெண்மதியொன் றாகாவே
துள்ளல்பல வாயினுமோர் தூய்கருட னாகாவே
வள்ளல்பல ராயினு நல் வன்னியர்க்கொப் பாவாரே.
(61)
(இ-ள்.) புன் பூசை புள்ளி பல ஆயினும் (ஓர்) புலி ஒப்பு ஆகா - அற்பத் தன்மையையுடைய பூனைகள் புள்ளிகளைக் கொண்டு பலவாகக்கூடி இருப்பினும் (அவைகள்) ஒரு புலிக்கு ஒப்பாகா, வெள்ளி பல ஆயினும் வான் வெண் மதி ஒன்று (ஒப்பு) ஆகா-(ஒளி செய்தலைக்கொண்டு) நக்ஷத்திரங்கள் பலவாகக் கூடியிருப்பினும் பெருமையுடைய ஒரு சந்திரனுக்கு ஒப்பாகா, துள்ளல் பல ஆயி-