116
மூலமும் - உரையும்
(இ-ள்.) நாடு பலவினுக்கு அரசு பண்ணாடு - (முற்கூறிய அங்கம் பத்தும் ஆராயுங்கால்) நாடுகள் பலவற்றுள்ளும் தலைமையுடையது தமிழ்நாடும், நகர்க்கு அரசு நலம் சேர் சச்சி - நகரங்கள் எவற்றினுக்குந் தலைமையுடையது நன்மைகள் நிறைந்த காஞ்சி நகரமும், நீடுவரைகளுக்கு அரசு மாமேரு - உயர்ந்து விளங்கும் மலைகள் எவற்றினுக்குந் தலைமையுடையது மஹா மேரு மலையும், நதிக்கு அரசு நிறை நீர்க்கங்கை - நதிகள் எவற்றினுந் தலைமையுடையது நீர் நிறைந்த கங்கா நதியும், சிலைக்கு அரசு பீடு பெறு அ உருத்திரன் வெம்சிலை - விற்கள் எவற்றினுந் தலைமையுடையது பெருமிதங் கொண்ட அவ்வுருத்திரனுடைய வில்லும் ஆதலின், (இவைகளோடு) அகிலம் பெரிதுகாக்க - உலகத்தை மிகவும் காவல் செய்யும்படி, அரசுக்கு-தலைமையுடைமைக்கு, மணி முடிசூடும் வன்னி அரசு அன்றி - இரத்தின கிரீடந்தரிக்கும் வன்னியர்கள் இராஜ்ஜியபாரஞ் செய்தலை யல்லாமற், வேறு சொல உண்டோ - வேறு சொல்வதற்கு இடம் இருக்கிறதா? (சொல்வீர்களாக) எ று.
கருத்து. வன்னியர்களுடைய இராஜ்ஜியபாரமே தலைமையுடையது என்பதாம்.
இதில். முன்கூறாத நகர் கூறி, வில்லையுங்கூறி யிருப்பதால் விற்பெற்ற நகர் காஞ்சி யென்றும் (66-ல் காஞ்சியைக் குறிக்கத் துளங்களில் பொற்சிலை என்றார்), தலைமையுடைய சிலவற்றைக்கூற மற்றவைகளு மாமெனத் தெரிவித்தலுமறிக.
வில்லின்புகழ் கூறுதற்சிறப்பு.
வில்லின் புகழ்கூறு தற்சிறப்பென்பது - வில்லினது புகழைச் சொல்லுதலின் பெருமை. அது அரசுக்கு உறுதி தருதலின், இங்கே அரசின் சிறப்புக்குப் பின்வைத்துக் கூறினார்.
வேறு.
மேவரு மேரு வொத்த வீரபண் ணாடர் வில்லைத்
தேவரே கூறல் வேண்டுந் திசைமுக னாதி யாய