சிலை யெழுபது
119
கருத்து. யாம் வன்னியர்களை அவர்களது குலத்துக்குரிய அரசியலை வில்முதலிய அங்கங்களைக் கொண்டு புகழத் தொண்டமண்டலத்தை யாளும் கருணாகரச் சோழ வன்னியனானவன் தேவ அமிர்தமெனக்கேட்டு, கவியின் உறுப்பு முதலியவைகளை ஆராய்ந்து மகிழ்ந்து, எம்மால் அனுபவஞ்செய்து வருகிற பூமிக்காக வருஷந்தோறும் செலுத்தும்வரியில் பொன் ஆயிரம்நீக்கி, பல்லக்கு ஆபரணங்களோடும் கவியொன்றுக்குப் பரிசு ஆயிரம் பொன்னாக எழுபத்தொன்பதினாயிரம் பொன்னும் கொடுத்தான் என்பதாம்.
இக்கருணாகரன் தொண்டமண்டலம் ஆண்ட சோழன் என்பதைப் படிக்காசுப் புலவரால் செய்யப்பட்ட தொண்டமண்டல சதகம்,
"பண்டையோர் நாளையி லோரேழ் கலிங்கப் பரணி கொண்டு, செண்டையு மேருவிற் றீட்டுவித் தோன்கழற் செம்பியன்செய், தொண்டைநன்னாடு புரக்கின்ற கோனந்தித் தோன்றலெங்கள், வண்டையர் கோனங் கருணாகரன்றொண்ட மண்டலமே"
என்னும் 92-வது கவியிற்காண்க. அதுவுமன்றி,
முதலாவது குலோத்துங்க சோழனிடம் மந்திரியாகவும், சேனைத்தலைவனாகவுமிருந்த இக்கருணாகரத்தொண்டமான் கலிங்கத்தின் பேரிற் போருக்குச் சென்று ஜெயம் பெற்றுத் திரும்பியவனாகையால், ஜெயங்கொண்டார் பாடிய கலிங்கத்துப்பரணி, காளிக்குக் கூளி கூறியது 30-வது கவியில்,
"இறைமொ ழிந்தளவி லெழுக லிங்கமவை
யெறிவ னென்று கழ றொழுதன
மறைமொ ழிந்தபடி மரபின் வந்தகுல
திலகன் வண்டைநக ரரசனே"
௸ 52, 53, 54-வது கவிகளில்