உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிலை எழுபது, 1947.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலை யெழுபது

121

மிகவும் பலிதமாகக் கடவன; மனுநெறிவகை பெறுக - மனுதரும சாஸ்திர மார்க்கங்களை உயிர்கள் பெற்று வாழக்கடவன; மணி முதலியவளம் நிறைக - இரத்தின முதலிய வளப்பங்கள் நிறைந்து விளங்கக்கடவன ; கனம் முறைமையின் மழை பொழிக - மேகங்கள் முறையோடும் தவறாது மழைபொழியக்கடவன ; களை அற உயர் பயிர் தழைக - களைகளில்லாது உயர்ந்து பயிர்கள் செழிக்கக் கடவன; இனமொடு சுரபிகள் பெருக - கூட் டங்களோடும் பசுக்கள் விருத்தியாகக் கடவன; இணை அறு புலி விருது உயர்க - ஒப்பில்லாத புலிக்கொடி உயர்ந்து தோன்றக்கடவது. எ-று. ஏ. பலவும் அசைகள்.


இதுவும் அது.
வேறு.

அவிசொரி வேள்வியைப் பாடினமே யயோநிசம் பவர்தமை
வாழ்த்தினமே, யவனிக் கிறைவரைப் பாடினமே யறமெண் ணான்குற
வாழ்த்தினமே, தவளக் கவிகையைப் பாடினமே தழல்வெம் புரவியை
வாழ்த்தினமே, தவமிகு வனியரைப் பாடினமே தனிநெடுஞ் சிலையினை வாழ்த்தினமே. (70)

(இ) ள் ) அவிசொரி வேள்வியைப் பாடினம் - நெய் சொரியாநின்ற யாகத்தைப்பாடினோம், அயோனி சம்பவர்தமை வாழ்த்தினம் - அயோநி உற்பவர்களைத் துதித்தாம்; அவனிக்கு இறைவரைப் பாடினம் - பூவுலகத்துக்கு அரசர்களைப்பாடினம்; அறம் எண்ணான்கு உற வாழ்த்தினம் - தருமங்கள் முப்பத்திரண்டும் பொருந்தும்படி துதித்தாம், தவளக் கவிகையைப் பாடினம் - முத்துக் குடையைப் பாடினம்; வெம்தழல் புரவியை வாழ்த்தினம் - வெவ்விய அக்கினிக்குதிரையைத் துதித்தாம்; தவமிகு வனியரைப்பாடினம் - தவமிகுந்த வன்னியர்களைப் பாடினம்; தனி நெடும் சிலையினை வாழ்த்தினம் - ஒப்பற்ற நீண்டவில்லைத் துதித்தாம். எ-று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலை_எழுபது,_1947.pdf/133&oldid=1863019" இலிருந்து மீள்விக்கப்பட்டது