122
மூலமும் - உரையும
இதுவும் அது.
கொச்சகம்.
பூவாழி மறைவாழி புகல்செம்பொற் சிலைவாழி
பாவாழி சுடர்வாழி பகர்சம்பு முனிவாழி
மாவாழி யகளங்க வனியர்பெருந் தமர்வாழி
கோவாழி யிவர்தனிச்செங் கோல்வாழி வாழியவே.
(71)
(இ - ள்.) பூவாழி - பூமிவாழக்கடவது; மறைவாழி - வேதங்கள் வாழக்கடவன; புகல்செம்பொன் சிலைவாழி - சொல்லுகின்ற மிக்க அழகினையுடைய சிலையெழுபதென்னும் இப்பிரபந்தம் வாழக்கடவது; பாவாழி - இதன் உள்ளுறுப்பாகிய கவிகளும் வாழக்கடவன; சுடர்வாழி - (அக்கினி சூரியன் சந்திரன் என்னும்) மூன்று சுடர்களும் வாழக்கடவன; பகர் சம்பு முனிவாழி - யாவரும் புகழுகின்ற சம்பு இருடியானவர் வாழக்கடவர்; மாவாழி - இலக்ஷூமி வாழக்கடவள்; அகளங்க வனியர் பெருந்தமர்வாழி - களங்கமில்லாத குணத்தினையுடைய வன்னியர்களது பெரியசுற்றத்தவர்கள் வாழக்கடவர்கள்; கோ வாழி-இவர்களது அரசு வாழக்கடவது; தனிச்செங்கோல் வாழி வாழிய - ஒப்பற்ற செங்கோல் வாழக்கடவது வாழக்கடவது. எ-று.
சுபம்! சுபம்!!
சிலை எழுபது மூலமும் உரையும்
முற்றிற்று.
.