உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிலை எழுபது, 1947.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

126

வன்னிமன்னர் சரித்திரம்

நிகழ்த்திவிட்டுத் தானதர்மங்கள் அளித்தபின் அண்ணாமலையார் கோயிலுக்கு எழுந்தருளுவார்.

இவ்வுற்சவத்திற் கெனச் சென்னையில் ஸ்ரீமான். பு. ராமசாமி நாயகர் அவர்களால் மூலதனமாக வைத்துள்ள சொத்தின் வரும்படியை மிகவும் விருத்திசெய்து அச்செலவிற்கெனப் பிரதிவருஷமும் சென்னை வன்னிகுல க்ஷத்திரிய மகா சங்க உப தலைவரும் மேற்படி மூலதனக் கமிட்டியின் முக்கியஸ்தருமாகிய, இராயபுரம் ஸ்ரீமான் மு.இராஜு நாயகர் அவர்கள் பெருமுயற்சியால் பணம் அனுப்பப்பட்டு வருகிறது. திருவண்ணாமலையில் உள்ள அக்கினிகுல க்ஷத்திரிய சங்கத்தார் முன்னின்று கிராமத்தவர்களையும் கொண்டு வெகு சிறப்பாக அவ் உற்சவத்தை நடத்தி வருகிறார்கள். அச்சமயம் சங்கற்பம் முதலியன யாவும் இம்மரபாரே செய்துகொள்ளுவது வழக்கம்.

மாசி மகத்திற்கு மறுநாள் முடிசூட்டு உற்சவம் நடப்பது வழக்கம். மாலையில் அருணாசலேஸ்வரருக்குத் தீபாராதனை யாவும் நிகழ்ந்த பின்பு சுவாமிக்கு சம்பந்தம் கட்டுவதற்கென்று அக்காலத்தில் பெரியோர்கள் ஏற்பாடு செய்திருந்த சம்பந்தனூர் கிராமத்தில் உள்ள வன்னிகுல க்ஷத்திரியர்கள் சுவாமி அம்மனுக்குப் புடவை வேஷ்டி கொண்டுவந்து சம்பந்தம் கட்டிவிட்டுப் போவது தொன்று தொட்டு வழக்கமாக இருந்துவந்ததென மந்திரபுஷ்பம் பிரம்மஸ்ரீ ஈஸ்வர குருக்கள் வன்னிகுல மித்திரனில் எழுதியுள்ளார்; நாமும் நேரில் கண்டிருக்கிறோம். இதில் சில மாறுதல்கள் இருந்தபோதிலும் நாளதும் அருணாசலேஸ்வரர் வல்லாளனுக்கு வாக்களித்தபடி கர்மக்கிரியை நடத்தியே வருகிறார். இச் சிறப்பையே திருக்கைவளத்தில்

"லிங்க உருவகற்றி நின்மலன் சேயாயுதிக்க
யென்கண் மணியேயென் றெடுக்குங்கை"

சோணா சலருக்குத் துங்கமணி கோபுரமும்
நாணாமற் செய்வித்த நன்மணிக்கை காணரிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலை_எழுபது,_1947.pdf/138&oldid=1861618" இலிருந்து மீள்விக்கப்பட்டது