உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிலை எழுபது, 1947.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



வன்னிமன்னர் சரித்திரம்

127

திருக்கருமஞ் செய்யும் சிவனார் தரிக்கவுயர்ந்
திருக்குமணி வஸ்திரங் கொண்டேகுங்கை.

எனவரும் வாக்கியங்கள் நாம் பொன்னேபோல் போற்றத் தக்க ஆதாரங்களாகும்.

வன்னியரில் ஒரு பிரிவினராகிய பல்லவ அரசர்களில் கோப்பெருஞ்சிங்கன் என்ற திரிபுவன சக்கரவர்த்தி கி.பி. 1242-ல் காஞ்சிமாநகரில் அநேக தர்மங்களை நிலைநாட்டிய தைப்போல் திருவண்ணாமலையில் அவன் செய்திருக்கும் அநேக தர்மங்களையும் பின்வரும் சாசனத்தால் அறியவும்.


திருவண்ணாமலை கோயில் முதற்பிராகாரத்து மேலண்டை சுவரில் 136- அடிகளைக் கொண்ட அகவற்பா.

கல்வெட்டு.

(திருவண்ணாமலை வரலாறு.)

"கார் வளர்மேனிக் கமலக் கண்ணன்
பார்வள ருந்திப் பல்லவர் பெருமான்
சகல புவனச் சக்கரவர்த்தி
கூட லவனி யாளப் பிறந்தான்
கோப்பெருஞ் சிங்கன் குரைகழற் காடவன்
சொன்மறை யாக்கன் சுடர்வா ளெடுத்துப்
பின்வர நடந்து பிலந்திறந் தருளிய
காவலர் தம்பிரான் கண்ணா ரமுதர்
அருண மால்வரைப் பெருமாள் தமக்குச்
செய்த திருப்பணி தெரிந்தெடுத் துரைப்பிற்
காதிற் கம்பியுங் கதிர்மணி மகுடமும்
செங்கதி ரெறிக்கு மங்க சுத்தமும்
பாகு வலயமும் பைம்பொற் பலதொழில்
திருவுடை யாடையும் திருக்கழற் கீழிடும்
பேதை பாதமும் பிறங்கிருட் கண்டமும்
இளஞா யிற்றி னெழில்நிறந் தோன்ற
வளர்மா ணிக்க வாளிவெயி லரும்பிய
விரிகட லவ யாளப் பிறந்தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலை_எழுபது,_1947.pdf/139&oldid=1863146" இலிருந்து மீள்விக்கப்பட்டது