128
வன்னிமன்னர் சரித்திரம்
திருவாசி கையும் சிங்கா சனமும்
கற்பக விருக்கமும் முத்தின் பந்தலும்
ஓடரி மைக்க ணுமையிசை பாடி
ஆடிய வதிருங் கழற் பெருமாளுக்
கினமா ணிக்கம் மிலங்கச் செய்த
பாதம் வல்ல பெருமாளென்னும்
திருவா சிகையின் சிறந்தசெங் கதிரொளி
விளங்கு மாணிக்கமுந் துளங்கும் வைரமும்
கட்டிய பொலன்றரு கூடமஞ் சனமும்
கண்ணா ரமுதர் காமக் கோட்டத்
துண்ணா முலையா முமையவள் தனக்குப்
பருமணி நிரைத்த திருவுடை யாடையும்
வென்றிவேல் கொண்டு குன்றெறி முருகன்
செந்நிற மேனியும் தேவியர் மேனியும்
மைஞ்ஞிறத் தோகை வண்ணமு மடையப்
பொன்னிற மாக்கிய பொற்பணி பலவும்
மல்லை காவலன் நிச்சங்க மல்லன்
பல்லவர் வேந்தன் பரதம் வல்லன்
கூட லவனி யாளப் பிறந்தான்
செய்தன விப்பணி யடங்கவு மிவன் சிறந்
தூழி காலம் வாழியிவன்மகன்
வாடா வாகைக் காடவர் குமாரன்
வான்புகழ் மல்லையும் மயிலையும் காஞ்சியும்
தண்டக நாடும் தண்புனற் பாலியும்
பெண்ணையும் கோவலும் மேவுகையு முடையவன்
எண்ணருஞ் சிறப்பில் யாவரு மதித்த
விருதரில் வீரன் விறல்வீ ராசனி
கரிய நாதன் காதற் குமரன்
குடதிசைக் கருநடர் தென்புலங் குறுகவும்
வடதிசைத் தெலுங்கர் வடக்கிருந் தழியவும்
போர்பல கடந்து பொருந்தா மன்னவர்
ஆரெயிற் சேர்ந்தூர் மலையர ணழித்து
நல்லிசைக் கடாம்புனை நன்னன் வெற்பில்