உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிலை எழுபது, 1947.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



வன்னிமன்னர் சரித்திரம்

129

வில்புக ழனைத்தும் மேம்படத் தங்கோன்
வாகையும் குரங்கும் விசயமுந் தீட்டிய
அடல்புனை நெடுவே லாட்கொண்ட தேவன்
கடகரி முனைமுகம் கடந்த காங்கயன்
கண்ணா ரமுதர் கனங்குழை யாகத்
தண்ணா மலையற் கன்புகெழு நெஞ்சில்
விருப்புடன் செய்த திருப்பணிக் கோவை
யாவையு மெடுத்துப் பாவல ருரைப்பில்
நின்ற தொல்புகழ் நிலமுழு தளித்த
வென்றி புனைதோ ளாட்கொண்ட ே
வேணா வுடையா னென்னும் பெயரான்
நீணாள் வாழ நிலைபெறச் செய்த
பெருமா ளமருந் திருமண் டபமும்
மருக்கமழ் கனகத் திருப்பளி யறையும்
திருவமு தேற்றும் பெருமண் டபமும்
விரிவுடன் செய்த திருக்காக் கள்ளியும்
பெருவிற லவனி யாளப் பிறந்தான்
திருமண் டபமுஞ் செழுமலர் தொடுத்த
கண்ணிவா டாது கண்ணிமை யாது
மண்மிசை நடவா வானோர் வலம்வர
வெண்மதி நிலவில் விளங்குசுட ரெறிக்கும்
படித்தள மென்னவும் படிமூன் றுக்கும்
அடித்தள மென்னவு மடையா மன்னவர்
மலைத்தளம் பறித்தம் மன்னவர் சுமந்த
சிலைத்தளங் கொண்டு செய்தசிலைத் தளமும்
எல்லையி லுகந்தொறுஞ் செல்வந் தொலையாது
வரும்படி வகுத்த நிச்சங்க மல்லன்
பெரும்பண் டாரமும் பிறைமுடிப் பெருமாள
இந்நாள் வந்திருந்தமை தோன்றவும்
முன்னா ளளந்த முறைமை காணவும்
வாட்டங் கண்ணியர் மனைதொறும் பலிகொளக்
காட்டிய வடிவிற் கங்காள வேடமும்
வான்முகத் தமரர் வணங்கச் செய்தே

9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலை_எழுபது,_1947.pdf/141&oldid=1861621" இலிருந்து மீள்விக்கப்பட்டது