130
வன்னிமன்னர் சரித்திரம்
நான்முகத் தெரு நாயகி தனக்கும்
அப்படி வகுத்த வணிநெடுந் தெருவும்
செப்பிய கதிரவர் திசைவலம் போதும்
சோதி நன்மணி வீதிக ளிலங்கக்
கலைபயில் தவத்தோர் நிலைபெற விருக்க
மலைவகுத் தனைய காங்கயன் மடமும்
கானிற் பயிலும் கடவுளர் தமக்கு
வேனிற் றென்றல் வியன்பெருங் கவரி
இருமருங் கிரட்ட யிமையவர் துதிக்கவும்
மருமணம் பெருகிய வாள்வல பெருமாள்
திருநெடுந் தோப்புந் தீர்த்த மாகிய
அழுத நன்னதியனைத்திலும் தூய
தமிழ்நாடு காத்த பெருமாள் தடாகமும்
வண்டிசை பாடல் மதுமலர் வாசம்
கொண்ட காடவர் குமாரன் தோப்பும்
கவின் வெம்பரிக் கதிர்வழி தடுத்த
அவனி யாளப் பிறந்தான் தோப்பும்
தலநிகழ் சேனைத் தலைவன் தோப்பும்
வெம்மை நாளில் வெஞ்சுரம் நடந்தவர்
தம்மனங் குளிரத் தண்டலை நிழற்செயும்
அம்மை மடமு மைய னேரியும்
வெற்பகந் துளைத்தெனக் கற்புடைய ராகி
அடல்நெடும் பிலத்தி லமுதுவந் தெழுந்த
வடிவாள் வல்ல பெருமாள் கிணறும்
அளிமுரல் கமலமு மாம்பலும் மலர்ந்த
குளிர்புனற் காடவ குமாரன் றடாகமும்
குன்று கரையன்ன கோடுயர் நெடுங்கரை
வென்றுமலை கொண்ட பெருமா ளேரியும்
சுரர்தரு நெருங்கிய சோலையு மொவ்வாப்
பரதம் வல்ல பெருமாள் தோப்பும்
வளஞிமி றார்க்கும் மடலிளம் பாளை
விரைகமழ் வீர ராயன் தோப்பும்
தவநெறிச் சுந்தரர் தம்பெருங் குலத்திற்