உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிலை எழுபது, 1947.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



வன்னிமன்னர் சரித்திரம்

131

த..............ற்குச் செய்து கொடுத்த
கடலென நிறைந்து கார்வயல் விளைக்கும்
விச்....சை நிச்சங்க மல்ல னேரியும்
காங்கயன் தடாகமும் காங்கயன் மடமும்
பூங்கமழ் சோலையும் பொற்புடன் விளங்க
இவ்வகை யாவையும் செய்தன னதனாற்
பாவை பாகன் சேவடித் தாமரை
யணிந்த சென்னியர் பார்க்குங் கண்ணினர்
அணிந்த நீற்றின ராகம நன்னெறிப்
படிந்த நெஞ்சினர் பரசம யங்கடனை
கடிந்த வாணையர் கண்ணுதற் பெருமான்
ஆதி நாதனாய் வேடங் கொண்டு
பாய்புனற் கங்கை யாயிர முகங்கொண்
டார்த்தெழு மன்னா ளேற்றுக் கொண்ட
திருந்திய பிறைமுடி யருந்தவச் சடாதரர்
ஆதியி லஞ்செழுத் தோதிய தொண்டரென்
றெண்ணிய நாற்பத் தெண்ணா யிரவரும்
திருவரு ளிவன்மேல் வைத்தனர்
இருநிலந் தன்னி லினிதுவாழ் கெனவே.


இதுவுமன்றி வல்லாளனைக் குறிக்கும் சாசன சுருக்கத்தைத் திருவண்ணாமலை வரலாற்றில்,

"இக்கோயிலில் ஹொய்சளவமிசத்தைச்சார்ந்த மூன்றாம் வீரவல்லாள தேவர் காலத்தில் அவருடைய தண்ட நாயகர் (சேனைத்தலைவர்) சாலிவாகன சகாப்தம் 1262-ல் (கி. பி. 1340) செய்த தானங்கள் குறிக்கப்படுகின்றன. இச்சாஸனங்கள் இப்போது வல்லாளகோபுரம் என்று வழங்கப்பெறும் கோபுர வாயிற் சுவர்களில் காணப்படா மையானும் சகாப்தம் 1299 (கி.பி. 1377) ஏற்பட்ட சாஸனமே மிகப் பழையதாய் இக்கோபுர வாயிலில் காணப்படுகின்ற காரணத்தானும் கி.பி.1340- ம் வருஷத்திற்குப் பின்னும் கி.பி. 1377-ம் வருஷத்திற்கு முன்னும் இக்கோபுர வாயில் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். மேற்கூறின வீரவல்லாள தேவரோ அல்லது அவருக்குப்பின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலை_எழுபது,_1947.pdf/143&oldid=1863147" இலிருந்து மீள்விக்கப்பட்டது