உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிலை எழுபது, 1947.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

132

வன்னிமன்னர் சரித்திரம்

வந்தவர்களோ அவரது நினைவுக் குறியாக இதைக் கட்டியிருக்க வேண்டும். மேற்கூறிய இந்த வாயில் வீரவல்லாளன் திருவாசல் என்றே சகாப்தம் 1299-ல் எழுந்த சாஸனத்தே அழைக்கப்படுகின்றது" என்று வெளியிடப்பட்டு இருக்கிறது.

அக்கினி குலோற்பவராகிய குலசேகரப் பெருமாள் தாம்பாடிய பெருமாள் திருமொழியில் "கொல்லி காவலன் கூடல் நாயகன் கோழிக்கோன் குலசேகரன்" என்றுகூறுவனவற்றால் மூவேந்தர் ஆண்டதேசங்களுக்கும் முதன்மை பெற்று விளங்கினாரெனத் தெரிகிறது. அதற்கேற்ப கோயம்புத்தூருக்கடுத்த பேரூர்ப் புராணத்தில்,

பரிதியொடு வெண்மதி பரிக்கவொளி நல்கும்
உருகெழு அனற்புதல்வன் ஆண்டவொரு சீரால்
இருசுடருதித்தவர்கள் ஆண்டவிரு நாட்டின்
குருவென விளங்கியது கொங்குவள நாடு

என்ற செய்யுளில் சூரியனுக்கும் சந்திரனுக்கும் ஒளியைத் தரும் அக்கினியில் உற்பவித்த சேர அரசர்கள் ஆண் சிறப்பானது சூரிய குல சோழனும், சந்திர குல பாண்டியனும் ஆண்ட தேசங்களுக்குக் குருவைப்போலும் தலைமைபெற்று விளங்கியது அக்னிகுல சேரன் ஆண்ட கொங்கு நாடு என்பதாகும்.

சேரனது இராஜ்ஜியம் சேலம், கோயம்புத்தூர், திருவனந்தபுரம், மலையாளம் முதலிய பிரதேசங்களைச் சேர்ந்ததாகும். குலசேகரப்பெருமாள் வழிவந்தவர்களே தற்காலமும் திருவனந்தபுர ராஜ்ஜியத்தை ஆட்சிபுரிந்து வருகிறார்கள். ஆகையால் அம்மன்னர்களுக்குப் பரம்பரையாக உள்ள பட்டப் பெயராவது "வஞ்சி பாலவர்ம குலசேகர கிரீடாதிபதி வன்னிய சுல்தான் ராம் ராஜ் பஹதூர் ஹிங்" என்ற அடைமொழிப் பெயருடன் அவ்வப்போது ஆண்டுவரும் அரசர்களின் பெயர்களையும் சேர்த்து வழங்குவது வழக்கமாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலை_எழுபது,_1947.pdf/144&oldid=1861624" இலிருந்து மீள்விக்கப்பட்டது