வன்னிமன்னர் சரித்திரம்
133
வன்னிய சுல்தான் எனவரும் பிரயோகம் மகமதியர் ஆட்சிகாலத்தில் ஏற்பட்டதாய் அறிகிறோம். விஜய நகரத்து அரசர்களும் அக்கினிகுலம் என்பதற்கு இராஜஸ்தான் சரித்திரச் சுருக்கம் முதல்வால்யம் 86, 87-பக்கங்களில் கூறுவனவற்றை வருண தருப்பணம் 203-ம் பக்கத்தில் விபரமாய் அறியவும். சுமார் 450 ஆண்டுகளுக்குமுன் அரசாண்ட அச்சுததேவமகாராயர், கிருஷ்ணதேவ மகாராயர் காலத்தில் புதுச்சேரிக்கடுத்த வில்லவநல்லூர் அக்னிவம்ச க்ஷத்திரியராகிய வன்னியர் மடாலயபூர்வோ திர செப்பேட்டில் அம்மன்னர்களின் பிரதாபங்களில் "வீர தீர வன்னிய பிரதாபன்" என்ற பட்டமும் சூட்டப் பட்டிருக்கிறது.
சேரன் வம்சத்தில் உற்பவித்த அரசர்களின் சரிதங்களையும் சேரன் செங்குட்டுவனாதிய பெருமக்களின் வரலாறுகளையும் இங்கு விரிக்கிற் பெருகும். கலியுகத்தில் ஆண்ட சேர அரசர்களின் பெயர்யாவும் வருணதருப்பணம் 280-ம் பக்கம் பார்க்கவும். தற்காலமுள்ள சில அனுபவ நிகழ்ச்சிகளை எடுத்தெழுதிச் சேரமன்னர் வரலாற்றினை முடித்துக் கொள்ளுவோம்.
சென்னை வன்னியகுல க்ஷத்திரிய மகாசங்கம் தோன்றிய 60-ஆண்டுகளாக ஜாதீய நூற்கள் வெளிவந்த பின்பு நம்மனோர் சேரமான்பெருமாள் நாயனாரையும் குலசேகரப் பெருமானையும் கொண்டாடத் தலைப்பட்டனர். அவற்றுள் சென்னை சிந்தாதிரிப்பேட்டை ஆதிகேசவப் பெருமாள் ஆலயத்தில் அங்குக் குலாபிமானப் பெரியார்களாய் வாழ்ந்திருந்து ஆதிமூலராய், மகாசங்க இன்ஸ்பெக்டர் கா. ஆறுமுக நாயகர் அவர்கள் பெருமுயற்சியால் குலசேகரப் பெருமாளின் சாத்துமுறை உற்சவம் மாசிமாதப் புனர்பூசத்தில் மிகப் பிரபலமாக வன்னிகுல உத்தாரணர் கா. கோபால் நாயகர், பல்லவகுலசேகர கா, கோ.பலபத்திர நாயகர் அவர்களால் மிகச் சிறப்பாக நடத்தப்பட்டு வந்தது. உற்சவ மறுநாள் தேவாலய குடை,