உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிலை எழுபது, 1947.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

134

வன்னிமன்னர் சரித்திரம்

கொடி முதலிய விருதுகளுடன் மரியாதை நிகழ்த்தி வருவது வழக்கம். அதைப்போல் ஸ்ரீமான் பலபத்திர நாயகரின் செல்வக் குமாரர் C. G. B. உலகநாத நாயகர் அவர்களால் நடந்தேறிவருகிறது. சென்னை, திருவல்லிக்கேணி, கோமளீஸ்வரன்பேட்டை, புரசை, குயப்பேட்டை, சூளை, இராயபுரம், காலடிப்பேட்டை, சின்ன காஞ்சீபுரம், முதலிய பல்வேறு இடங்களிலுள்ள விஷ்ணு ஆலயங்களில் குலசேகரப் பெருமாள் உற்சவங்கள் நம்மனோரால் நாளதும் நடத்தப்பட்டு வருகின்றன.

சேரமான் பெருமாள் நாயனார் திருநட்சத்திரம் பல சிவஸ்தலங்களில் ஆடிமாத சுவாதி நட்சத்திரத்தில் நடந்தேறி வருகிறதெனினும் அவற்றையெல்லாம் விட மிகச் சிறந்த முறையில் காஞ்சீமாநகரில் நடந்தேறி வந்ததுதான் போற்றத்தக்கதாகும்.

காஞ்சீபுரம் ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்தினின்றும் ஆடிமாதம் சுவாதி நட்சத்திரத்தன்று சுந்தரமூர்த்தி சுவாமிகள் கையிலைக்கு எழுந்தருளும் காட்சியாய் வெள்ளை யானையின்மீது அமர்ந்து திருவீதியுலா வருவதும் கீழண்டை ராஜ வீதியில் உள்ள வன்னி குலோபகாரி பு. தியாகராய நாயகர் அவர்கள் சத்திரத்தை சுந்தரமூர்த்தி சுவாமிகள் அணுகியதும் தீபாராதனை நிகழ்த்திப் புறப்படும் சமயம் பின் தொடர்ந்து வெள்ளைக் குதிரையின் மீது சேரமான் பெருமாள் நாயனார் கைலைக்குச் செல்லும் காட்சி மிக்க மாட்சியாக காண்போர் களித்துப் பக்திப் பரவசம் ஆகும் வண்ணம் நிகழ்ந்துவந்தது.

அன்று நம்மவர் சத்திரத்தில் மகாபிஷேகம் மகேஸ்வர பூஜை ஆகியவைபவங்களுடன் 20-ஆண்டுகளாக மௌலிவாக்கம் சம்புகுல வள்ளல் ஸ்ரீமான்,பால.முருகேச நாயகரவர்கள் நடத்திவந்தார்கள். அவர் சிவபதம் அடைந்தபின்பு அதைக் கவனியாமல் விட்டிருப்பதால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலை_எழுபது,_1947.pdf/146&oldid=1861626" இலிருந்து மீள்விக்கப்பட்டது