136
வன்னிமன்னர் சரித்திரம்
சோழமன்னர்கள் ஏற்படுத்தியதால் தற்போது சோழ தேசம் எப்படி விளங்குகிறதெனில், விளத்தொட்டி புராணம் கூறுவதுபோல்,
"புண்ணிய மூர்த்தியெங்கும் புண்ணிய தானமெங்கும்
புண்ணிய தீர்த்தமெங்கும் புண்ணிய சாலையெங்கும்
புண்ணிய மறைகளெங்கும் புண்ணிய விருப்பரெங்கும்
புண்ணிய போகமெங்கும் பொலிவது சோழநாடு."
என்ற தன்மையில் புலவர் வாக்கிற்கு இலக்காய்ப் பிரகாசிக்கிறது.
இத்தகைய தெய்வீகம் பொருந்திய சோழ நன்னாட்டில் மூவரால் பாடப்பெற்ற தலங்கள் 190-ஆகும். வடநாடு, தென்னாடு யாவும் சேர்ந்து தேவாரம் பெற்ற தலங்கள் 274-ல் சோழ தேசத்தில் 190 - போக மிகுதி 84-இதர தேசங்களிலிருக்கின்றன அருமையும் பெருமையும் வாய்ந்த மேற்படி தலங்களில் தலைமைபெற்று விளங்குவது சிதம்பரம் மகா க்ஷேத்திரமேயாகும். அதற்குக் கோயில் எனவும் ஒரு பெயருண்டு. அத்தலத்தில் திருக்கோயில் கொண்டுள்ள நடராஜப் பெருமானே சோழவம்சத்தினருக்குக் குலதெய்வமாய் விளங்குகிறார். வன்னியர் புராணம் திருத்தலச் சருக்கத்தில்,
"இத்துணை நலன தார்ந்த யெழிலுறுஞ் சோழ னாட்டிற்
பத்திசால் புலிக்கா லோனும் பதஞ்சலி மெய்யன் றானுஞ்
சித்தம துருக நித்தஞ் சிவகாம வல்லி காண
நித்தனார் நடிக்குந் தூய சிதம்பரம் நின்ற தன்றே."
எனக் கூறப்பட்டுள்ளது.
சோழர் தம் குடிக்கே தொன்மைப் பதியாய் விளங்கும் சிதம்பரத்தல வரலாற்றினையும், அக் கோயிலை ஸ்தாபித்த சிங்கவர்மன் என்னும் இரணியவர்மச் சோழனது பக்தியையும் கீர்த்தியையும் கோயிற் புராணத்திற் உள்ளதை இங்குச் சுருக்கிக் கூறுவோம்.