உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிலை எழுபது, 1947.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

144

வன்னிமன்னர் சரித்திரம்


பூந்தமல்லிக் கடுத்த குன்றத்தூரில் சேக்கிழார் பெருமானுக்கு வைகாசி மாதத்தில் நிகழும் 10-நாள் உற்சவத்தில் 9-வது நாளில் சோழ மன்னருடன் சேக்கிழார் வீதி வலம்வரும் சிறந்த உற்சவத்தை மௌலிவாக்கம் சம்புகுல வள்ளல் ஸ்ரீமான் பா. ல. முருகேச நாயகர் அவர்கள் நடத்தி வந்ததும் இங்குக் குறிப்பிடத் தக்கவிஷயமாகும்.

சிதம்பா மகாக்ஷேத்திரத்தில் நடைபெறும் மார்கழி மாதம் திருவாதிரை உற்சவத்தின் 9-வது நாளிலும் ஆனித் திருமஞ்சன உற்சவத்தின் 9-வது தினத்திலும் பொன்னம்பலத்தில் ஸ்தாபித்துள்ள குலோத்துங்க சோழனது திருவுருவத்திற்குமுன் மண்டகப்படி தீபாராதனையாவும் சிதம்பரம் தாலுக்காவிலுள்ள படையாட்சியார்களால் நாளதும் நடைபெற்று வருகிறது.

கோயிற்புராணம் இரணியவர்மச் சோழனது சரித்திரத்தில் அம்மன்னன் கேட்டுக்கொண்டபடி நாளதும் சோழ வம்சத்தினருக்கு நடைபெற்றுவரும் முடிசூட்டி வைபவத்தைச் சுருக்கிக் கூறுவோம்.

இற்றைக்கு 75-வருடங்களுக்குமுன் ஜாதி சங்கிரகச்சாரம் என்னும் கிரந்தம் வெளிவந்த காலத்தில் பித்தர் புரத்தில் ஜமீன்தாரராக வாழ்ந்தவர் இராம பத்திர சூரப்ப சோழனார் எனவும் அவருக்கே பஞ்சாட்சரப்படி அபிஷேகமும் ஆயிரக்கால் மண்டபத்தில் முடிசூட்டு விழாவும் நிகழ்ந்ததாக மேற்படி நூல் 214-ம் பக்கத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது.

அதன்பிறகு அம்மரபுதித்த பித்தர்புரம் ஜமீன்தார் ராஜராஜ ஸ்ரீமான் சாமிதுரை சூரப்ப சோழனாருக்கு நடந்த மகுடாபிஷேக வைபவமே மிகச் சிறந்ததாகும். அதற்கு மகா சங்கத்தாருடன் யானும் சென்றிருந்து தரிசிக்கும் பேறுபெற்றேன். அக்காலத்தில் தென்னாற்காடு ஜில்லா வன்னிகுல க்ஷத்திரிய சங்கம் பிரபலமாக நடந்து வந்ததால் அச்சங்க காரியதரிசி ஸ்ரீமான் A. வைத்திய லிங்கராஜா அவர்களது அரிய பெரிய முயற்சியினால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலை_எழுபது,_1947.pdf/157&oldid=1857494" இலிருந்து மீள்விக்கப்பட்டது