வன்னிமன்னர் சரித்திரம்
157
அதன்பிறகு பிரஞ்சிந்தியா புதுவை வன்னியர் கல்வி அபிவிருத்தி சங்கத்தின் வெள்ளிவிழா புதுவை மாநகரில் 6-2-44-ல் வெகு ஆடம்பரத்துடன் நிகழ்ந்த காலையும் நமது மதிப்பிற்குரிய மாட்சிமை மிக்க ராஜராஜ ஸ்ரீமான் தி. ஆண்டியப்ப சூரப்ப சோழனார் அவர்களே அக்ராசனராக அமர்ந்து கண்ணுக்கினிய காட்சியாக யாவருங் கண்டு கழிபேருவகை எய்தும்வண்ணம் நடந்தேறியது. அச்சிறப்பும் அங்கு அவருக்களித்த வரவேற்புப் பத்திரங்களும் புதுவை வன்னியர் கல்வி அபிவிருத்தி சங்கத்தார் வெளியிட்டுள்ளார்கள். மேற்படி சங்கங்களில் நிகழ்ந்தவைகள் அனைத்தையும் இங்கு வெளியிடுவதாயின் அதுவோர் பாரதமாக விரியும்.
1947௵ செப்டம்பர்௴ 28௳ ஆதிவாரம் சென்னை திருமயிலை மகாக்ஷேத்திரத்தில் கூடிய சென்னை வன்னி குல க்ஷத்திரிய மகா சங்க 59-வது ஆண்டு விழாவிலும் மேற்படி சோழனார் அவர்களே அக்ராசனம் வகித்து மிகச் சிறப்புடன் நடத்திவைத்தார்.
தமிழ் மன்னர் சந்ததியார்.
"அரியலூ ராட்சிபெறு மழவர்கோவு
மளகைபுரிப் பாண்டியரு முடையார்தாமும்
பெருமைமிகு பித்தர்புரப் பிரானார்பாரூர்
பிறங்குகச்சி ராயர்சிவ கிரிவாழிந்து
விரிமரபில் வழுதிகுல வேந்தர் தாமும்
வென்றிவணங் காமுடியா ரூற்றங்காலிற்
பரமவிச்சுரவன்னி மன்னர் முன்னோர்
பகர்நமது குலவுறவிற் பவித்தாரன்றே."
என வர்மா அவர்கள் பாடியுள்ளார்.
வன்னிமன்னர் சரித்திரத்தில் சேர்க்கவேண்டிய விஷயங்கள் இன்னும் பல உள்ளன. பாண்டியர் மரபைச்