6
மெச்சுவா கத்தின் மாறிலாப் புகழான்
மிகுதிறல் வன்னியர் திலகன்
எச்சுவா கதமுந் தருவனி மித்திர
னிலங்கிடப் புரிதரு வள்ளல்.
சூரனை வதைத்த வீரவே லுடைய
சுப்பிர மணியாற் பெயரை
யாரநல் லதிட்டம் பெறுபுக ழாள
னருந்தமிழ்க் கலைமகட் புணர்வாற்
சீரிய பன்னூன் மகாருட னிலங்குஞ்
சிறப்பின னிவன்புக சென்றுந்
தாரணி யுள்ள நாள்ள வினுமே
தணிவற விளங்குக மாதோ.
சென்னை ஹிந்துதியலாஜிகல் ஹைஸ்கூல் தமிழ்ப்
பண்டிதரும், லோகோபகாரி பத்திராதிபரும்
வேதாந்த வித்வசிரோமணியுமாகிய
ஸ்ரீமத். கோ. வடிவேலு செட்டியார்
அவர்கள் இயற்றிய,
அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்.
திண்மையமை வன்னியர்மேற் றிட்பநுட்பஞ்
செறிந்தழகு செவ்வே தோன்ற
வண்மையெலாம் பெறுகம்பர் வகுத்தசிலை
யெழுபதிற்கு வளப்ப மாகத்
தண்மைநிறைந் திடும்பேழைக் குடிவாழுந்
துரைசாமி தக்கோ ரேற்க
ஒண்மையாப் பன்னூலாய்ந் துரையெழிதி
யுலாவச்சீ ருற்றான் மாதோ.