உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிலை எழுபது, 1947.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

7


சென்னை துரைத்தன மாதர்கலாசாலைத் தமிழ்ப்பண்டிதர்
ம-௱-௱-ஸ்ரீ. கா. நமச்சிவாய முதலியார்

அவர்கள் பாடிய வெண்பா.

கலைமகளைக் கண்கண்ட கம்ப னளித்த
சிலையெழுப துக்குரையைச் செய்தான்- கலைதேர்
உரைசாமி யென்ன உலகோ ருரைப்பத்
துரைசாமி யாம்புலவன் சூழ்ந்து.




சென்னை-ம-௱-௱-ஸ்ரீ,
M.S.பூர்ணலிங்கம் பிள்ளை, பி. எ. எல். டி.,
அவர்கள்

அபிப்பிராயம்.

சிலை எழுபது என்ற அருமையான நூலும் உரையும் பார்த்தேன். உரை பழைய வுரைகளைப் போன்று நன்னடையில் ஆழ்ந்த கருத்துக்களைத் தெள்ளிதில் விளக்குகின்றது. முகவுரையில் கம்பருடைய காலநிர்ணயம் கூடியவரை சரியாகச் செய்யப்பட்டிருக்கிறது. வன்னியர் குல மகிமையை விளக்குவதுடன் பொதுநீதியும் பற்பல விடங்களில் போதிக்கப் பட்டிருப்பதைக் காணலாம். உரையில் எடுத்துக் காட்டியுள்ள மேற்கோள்கள் அருமையுள்ளன ; பாராட்டத்தக்கன. இதைப்பதிப்பித்த நாயகரவர்களின் அரிய உழைப்பை எவரும் நன்குமதிப்ப ரென்பதில் ஐயமில்லை.


சென்னை பச்சையப்பன் கலாசாலைத்
தமிழ்ப்பண்டிதர் ம-௱-௱-ஸ்ரீ,
கா. ர. கோவிந்தராஜ முதலியாரவர்கள்

இயற்றிய
அறுசீர்க்கழி நெடிலாசிரிய விருத்தம்.

பேரார் கம்ப நாடரெனும்
       பெரிய ரளித்த நற்றமிழின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலை_எழுபது,_1947.pdf/19&oldid=1862334" இலிருந்து மீள்விக்கப்பட்டது