8
ஏரார் பொருளேய் சிலையெழுப
தென்னு நூலி னுட்பொருளைப்
பாரோ ருணர்ந்து மனங்களிக்கப்
பரிவார் வன்னி குலமன்னர்
சீரார் பெருமை யுலகறியச்
சிறந்த வுரைதான் வகுத்தனனால்.
ஏழைக் குடியாங் கிலையென்ன
வேந்து செங்கோல் வன்னியர்தம்
ஆழிக் கிணையாங் குலமதனி
லழகார் மணியி னினிதுதித்தோன்
பேழைக் குடியான் கலைநலந்தேர்
பிறங்கு மறிஞன் றுரைசாமி
வாழி வளஞ்சா ரிவ்வுரையை
வாய்ந்து பலவோர் களிப்பாரே.
மதுரைத் தமிழ்ச்சங்கத்து வித்துவான்
செங்கல்பட்டு ம-௱-௱-ஸ்ரீ,
அரங்கசாமி நாயகரவர்கள் இயற்றிய
விருத்தம்.
முக்குலமன் னரில் முதன்மை பெற்றிடுவன்
னியர்புகழ்ச்சி முழுது மன்ன
இக்குமொழிக் கம்பன்செய் சிலையெழுப
தெனுநூலுக் கிசைவ தாகத்
தக்கவுரை யியற்றினன்பே ழைக்குடிநந்
துரைசாமித் தமிழ்நா வல்லோன்
மிக்கவச்சி லதைப்பதித்துச் சுப்ரமண்யக்
குரிசிலிசை மேவி னானால்.