12
பத்தேழு பாவினத்தாற் சிலையெழுப தெனுநூலைப்
பரிவி னாலே
பித்தேறிப் பிதற்றுநர்நா வடங்கியிடப் பெரும்புலமைக்
கம்பன் மென்மேல்
சத்தூர வியற்றினதற் கோருரைதா னிஞ்ஞான்று
சாற்றி னானால்.
அன்னவன்யா ரென்புழீஇ யரியகலை நனிதெரிந்தா
னறிவோர் சாற்றும்
மன்னவர்பே ழைக்குடிவாழ் துரைசாமிப் பெயருடைய
மகிப னின்று
வன்னிகுல மித்திரன்பத் திராதிபனாஞ் சுப்பிரமண்ய
நாய்க னச்சில்
முன்னுறவைத் தேவிடுத்தா னவைகாண வுளமகிழ்ந்தே
முலகுக் காமால்.
சென்னை கலியுகவர்த்தமானி பத்திராதிபர் ஸ்ரீமத் கந்தசாமி பிள்ளை மாணாக்கரி லொருவரும், இலவை. ஜோதிடவைத்திய சித்தாந்தி ஸ்ரீமத் சங்கரலிங்கம் பிள்ளை குமாரரும், தென்காசி ஸ்ரீராமாநுஜம் பிரஸ் மானேஜருமான, ஸ்ரீமான், E. S. சிவராமலிங்கம் பிள்ளை அவர்கள் இயற்றிய,
அறுசீர்க்கழி நெடிலாசிரிய விருத்தம்.
பதியுறைவோர் புறவிழிப்பா லவர்தன்குறை
தீர்க்கமலர்ப் பதியன் றெய்வ
நிதியெனவே முதற்படைத்த நிருபர்வன்னி
குலக்கரும்பின் நிறையைக் கம்பன்
துதியுளசெஞ் சிலையெழுப தெனக்கவிசற்
கரைவட்டாய் தொகுத்தான் யார்க்கு
மதியுநற் றுரைசாமி வள்ளலுரை
வெனும்பாகாய் வழங்கி னானால்.