உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிலை எழுபது, 1947.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

27


இத்தகைய ஆதாரங்களை நாம் உற்று நோக்குவோமாகில் கி. பி. 1090 க்குமேல் கி. பி. 1170 வரையில் சுமார் 80-வருட காலம் கம்பர் ஜீவித்திருந்தவ ரென்பதும், தமது வாழ்நாளின் முற்பகுதியில் சிலையெழுபதைப் பாடினாரென்பதும் மறுக்கமுடியாத விஷயமாகும். ஒருபுலவன் கேட்போர் கனிக்கத் தெள்ளிய நடையிலும் கடின பதங்களை அமைத்தும் பாடவல்லவன் என்பதைக் கருதுவோர் இது கம்பர் பாடிய நூலென்பதில் ஐயங்கொள்ளார். இவரது சரிதையை ஆராயப்புகுவோர் சிலர் முதலாவது குலோத்துங்கன், இரண்டாவது குலோத்துங்கன் என்பவர்களது காலவரையும் இவர்கள் மெய்க்கீர்த்தியையும் அறியாது மயங்குவர். முதலாவது குலோத்துங்கச் சோழன், ஏகசக்ராதிபதியா யரசியற்றியவன் ; கலிங்கத்துப் பரணி கொண்டவன்; சேக்கிழார் பெருமானுக்கு உத்தமச் சோழப் பல்லவன் என்ற உயர்பட்ட மளித்து அவருக்கு வேண்டிய உதவி புரிந்து பெரிய புராணத்தைப் பாடும்படி செய்தவன்.

இவன் மகா சிவபக்தனென்று உமாபதி சிவாசாரியார் கோயிற் புராணத்தில் புகழ்ந்துரைத்துள்ளார். இம்மன்னனது காலத்தில் கம்பர் இராமாயணம் பாடினாரென்று கொள்வது முரண்படும். இவனது காலத்திற்குப் பிறகே கம்பர் இரண்டாவது குலோத்துங்கன் காலத்து இராமாயணத்தைப் பாடி முடித்தார்.

சிலையெழுப தென்னும் இப்பிரபந்தத்தின் கருத்து:— சேர, சோழ, பாண்டிய, பல்லவர்களாகிய வன்னியர், கள் முதலில் தெய்வத்தை வணங்கிக் குரவர்களைப் புகழ்ந்து, வேதசாஸ்திரவிதி வழுவா வகையாகச் சுபதினத்தில் வில்லை யெடுத்துப் பயின்று பகையை அழித்து ஜயமடைந்து. நால்வகைச் சேனைகளோடும் அரண்களை யுடையவர்களாகி, துவசத்தை நாட்டி, அரசாட்சி மண்டபத்துள் சிங்காசனத்தின் மேலமர்ந்து, முடி சூடி, மகர கேயூர கிரீடந்தரித்து, சந்திரவட்டக்குழை நிழல் செய்யும்படி செங்கோல் நடையினால் ஆக்கினா சக்கிரத்தைச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலை_எழுபது,_1947.pdf/39&oldid=1862260" இலிருந்து மீள்விக்கப்பட்டது