28
செலுத்தி, தொழினெறி பிறழாது முத்திரை மோதிர மணிந்து, துஷ்ட நிக்கிரகஞ் செய்து, காவல் புரிந்து யாவரும் தொழுதல் முதலியவை செய்யச் செல்வாக்கினால் புகழையடைந்து, குற்றங் கடிந்து, பெருந் தன்மையோடும் இதய வண்மையுடையவராகி, தேவர்களும் பிராமணர்களும் இலக்குமியும் மன்னவர்களும் பெண்களும் வித்வான்களும் பகைவர்களும் முறையே வியக்கவும், வாழ்த்தவும், வசிக்கவும், திறையளக்கவும், நடிக்கவும், துதிக்கவும், வணங்கவும், ஏற்றதாய் இராஜ சமுகத்தோடும் பெரும் பதி இருந்து ; அரசர்கள் புடைசூழ நெறி தவறாது, சாந்த முதலிய குணங்களோடு நிறைந்து, ஈதல் வள்ளற்றன்மை யுயர்ந்து, அடுத்தவர்களுக்குத் தாழ்வைத் தராது, உமையருளோடும் அகண்ட ஐசுவரியத்தையும் தசாங்கத்தையும் உடையவர்களாகி, தமது குல ஒழுக்கப்படி மனுமுறை வழுவாது அரசு புரிந்து வருகின்ற இவர்களது வில்லைத் தேவரும், மூவரும், அகத்தியனும், அனந்தனும் கூறல் வேண்டுமே யொழிய எம்போல்பவராற் புகழுந் தகமையதோ சொல்வீர்களாகவென கருணாகரத் தொண்டை வன்னியன் கேட்டுப் பரிசு கொடுக்கக் கம்பர் பெற்றுக் கொண்டு துதித்தது என்பதை 68-ம் பக்கத்திற் காண்க.
இந்நூல் உரையெழுதுவதற்காக முயற்சியெடுத்துக் கொண்ட குலாபிமான கனவான்களாகிய இராஜ வன்னிய ராஜஸ்ரீ, பூந்தோட்டம் வன்னிகுலசேகர வி. குருசாமி நாயர், காரைக்கால், வ. இராமலிங்க படையாட்சியார், நாகப்பட்டினம், அரங்க இராமசாமி நாயகர், காரைக்கால் சாஸ்திர ஆராய்ச்சி வி. குருசாமி படையாட்சியார் முத லியவர்களுக்கும், சிரமம் பாராது உரை யெழுதி முடித்த பேழைக்குடி, ம. துரைசாமி நாயகர் அவர்களுக்கும் எனது மனப்பூர்வமான வந்தனத்தைச் செலுத்தக் கடமைப்பட்டுள்ளேன்.
ஆ. சுப்பிரமணிய நாயகர்.
வன்னிகுல மித்திரன் |
.