௳
கடவுள் துணை
சிலையெழுபது
மூலமும் உரையும்.
பாயிரம்.
பாயிரமென்பது.—வரலாறு. அது நூலுக்கு முன் சொல்வது. முகவுரை யெனினும், பாயிரமெனினும், நூன்முக மெனினும் ஒக்கும். அதை “ஆயிர முகத்தா னகன் தாயினும், பாயிரமில்லது பனுவ லன்றே.” என்பனவாகலின், மாநகர்க்குக் கோபுரமே போலும், இங்கே நூலுக்கு முதலில் வைத்து எட்டுக் கவிகளால் பாயிரங் கூறினார்.
கடவுள் வணக்கம்.
கடவுள் வணக்கமென்பது :—தெய்வத்தை வணங்கிக் கொள்ளுதல். அது, இந்நூல் நிறைவுபெறற் பொருட்டாதலின் இங்கே பாயிரத்துக்கு முதலில் வைத்துக் கூறினார்.
கொச்சகம்.
திருவளரும் வன்னியர்செஞ் சிலையெழுப தினைவிளம்ப
மருவளர்பைங் கடுக்கையும்வெண் மதியுமிலைந் தோன்வாமத்
துருவளரும் வரைமடந்தை யுவந்தளிப்பத் தோன்றிவரந்
தருவளஞ்செய் விகடசக்ரத் தந்திமுகன் றாடொமுவாம்.
(1)
(இதன் பதப்பொருள்.) திருவளரும் வன்னியர் - செல்வம் நிறைந்திருக்கின்ற வன்னியர்களது, செம்சிலை எழுபதினை விளம்ப - (குலத்துக்குரிய) அழகிய சிலை எழுபதென்னும் பிரபந்தத்தைச் சொல்ல, மருவளர் பைங்கடுக்கையும் வெண்மதியும் மிலைந்தோன் - வாசனை தங்கிய பசியகொன்றை மாலையையும் வெள்ளிய சந்திரனையும்.
3