38
மூலமும் - உரையும்.
றும், ௬எ -ல் “வீர பண்ணாடர் வில்லை” என்றும், மற்றைய கவிகளில் பொதுவில் “வன்னியர்” என்றும், ௩௧-வது கவியாகிய கொடிச் சிறப்பில் “அடர்ப் புவி மூன்றினுந்தாமே அரசியற்றும்படி தாவ” என்றும் கூறியிருப்பதால் பொதுவாயதெனவே துணிக. மிகுதிபற்றிச் சிறப்பெனலாகாதோவெனில்? அறியாது கூறினாய்! மதுதெளிவெனச் சொல் முதுமொழி நல்லாய் [1] அக்கினிக்குள் சூரியனும் சூரியனுக்குள் சந்திரனும் அடங்குதலின் உற்று நோக்குங்கால் முழுமையும் அக்கினியின் மயமேயன்றி வேறுயாது? நீயே கூறுக. அதுபோல அவ்வக்கினி குலமே மற்றையது மென்பார் மிகுதியுமமைத்துக் கூறினரென வுணர்க. இக்காரணங்களால் வன்னிய ரென்னும் பதம்: யுகங்கடோறும் [2] ஆதியில் பிரமாவினாலேயே தோன்றி தமிழ்வேந்தர் மூவருள் சேரன் குலத்துக்காகி, பிறகு சோழ பாண்டியர்களைத் தழுவிக்காட்டி மற்றைய தேசத்தரசர்களுக்கு மாயதோர் மொழியென வுணர்க.
நூற்பெயரும், ஆக்கியோன் பெயரும்.
நூற்பெயரும் ஆக்கியோன் பெயரும் என்பது நூலினது பெயரும் அதைச் செய்தவன் பெயரும் முதலியன. அது வடநூல் வழக்குப்பற்றி தானே நாந்திக்கூறிக் கொள்ளுதலின் இங்கே கடவுள் வணக்கத்தின் பின்வைத்துக் கூறினார்.
- ↑ க்ஷத்திரியகுல மூன்றனுள் முதன்மையுடையது அக்கினி குலம்; அக்குலத்துக்குரிய அரசியலாகிய படை முதலிய வுறுப்புகளே மற்றைய விரண்டுகுலத்துக்கு மாதலாலும், அதனால் சூரியகுலச் சிலையெழுபது சந்திரகுலச் சிலையெழுபது என வெடுக்கின் சொன்னதையே சொல்லவேண்டி வருதலின் கூறியது கூறல் கூற்ற மாதலோடும் பொருத்த மின்மையாலும் அக்கினி குல மொன்றற்கே கூறின் மற்றையதும் அடங்குமென்பார் கூறினார் எனக்கொள்க. இக்ஷ்வாகு முதலியோர் சூரியகுலத்தவரும், புரூரவர் முதலியோர் சந்திரகுலத்தவரும் ஆவர்.
- ↑ இதை இதன் ௫-வது கவியினுங்காண்க.