உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிலை எழுபது, 1947.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



சிலை யெழுபது

39

அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்

முந்துநாள் வீர சம்பு முனிசெய்மா மகத்திற் போந்த
சந்ததி யார்சீ ரோது கெனத்தகு முதியோர் கேட்ப
இந்தணி சடிலத் தெம்மா னிணைக்கழல் பராஅ யிசைத்தான்
செந்தமிழ்க் கம்பன் செம்பொற் சிலையெழு பதுவா மிந்நூல். (2)

(இ-ள்.) (கருணாகரச் சோழன் கம்பரைப் பார்த்து.) முந்துநாள் - ஆதியில், வீரசம்பு முனிசெய் மாமகத்தில் போந்த சந்ததியார் சீர்- விஜயத்தைக்கொண்ட சம்பு முனிவரால் செய்யப்பட்ட மகத்தாகிய யாகத்தில் வந்த (உருத்திர வன்னிய மகாராஜன் முதலியோர்) சந்ததியர்களாகிய (வன்னியர்களது) சிறப்பைச் சொல்லும் நீர்செய்த பிரபந்தத்தை, ஓதுகென - சொல்லுக என்று சொல்ல, தகு முதியோர்கேட்ப (அப்பொழுது அவனது சபையில் தங்கிய) தகுதியுடைய பெரியோர்கள் கேட்டு மகிழும்படியாக, செந்தமிழ்க் கம்பன் - செவ்விய தமிழை ஆய்ந்த கம்பரானவர், இந்து அணி சடிலத்து - சந்திரனைத் தரித்த சடாபாரத்தினை யுடைய, எம்மான் இணைக்கழல்பரா அய் - எமது பிரானாகிய பரமசிவனது இரண்டு பாதங்களையுந் தொழுது, செம்பொன் சிலை எழுபது ஆம் இந்நூலில் இசைத்தான் - மிக்க அழகினையுடைய மாற்றுயர்ந்த பொன்னாற் செய்த சிலையெழுப தென்னும் பெயர்கொண்ட இப்பிரபந்தத்தைச் சொன்னார் (எ-று.)

கருத்து. கம்பரானவர் கருணாகரன் சபையில் பெரியோர் கேட்டு மகிழும்படி சிலையெழுபதென்னும் இப் பிரபந்தத்தைச் சொன்னா ரென்பதாம்.

கம்பரென்பதனால் ஆக்கியோன் பெயரும், முந்துநாள் வீரசம்பு முனிசெய்மாமகத்திற் போந்த சந்ததியாரென்றதனால் முன்னூலின் வழியும், செந்தமிழென்றதனால் அது வழங்கு நிலமாகிய வடவேங்கடந் தென்குமரி மேல்கீழ் கடல் எல்லையும், சிலையெழுபதென்றதனால் நூற்பெயரும், சீர் என்றதனால் அந்நூற்குரிய வருணத்தவர்களது சிறப்பைத் தொகுத்துக் கூறுதல் என்னும் யாப்பும், அதனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலை_எழுபது,_1947.pdf/51&oldid=1861832" இலிருந்து மீள்விக்கப்பட்டது