உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிலை எழுபது, 1947.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

மூலமும் - உரையும்.

விளக்கிக்காட்டுதல் நுதலிய பொருளும், அப்படிக் காட்டியவற்றை விளங்க அறிந்து கொள்ளுதல் பயனும், தகுமுதியோர் கேட்பவென்றதனால் கேட்போரும், ஆகிய எட்டினையும் வெளிப்படையினும், கருணாகரச்சோழன் ஆண்டநாள் காலமும், அவன் முன்னிலை அவையும், பரிசு பெறுதல் காரணமும் ஆகிய இம் மூன்றையும் குறிப்பினும் எச்சமாக்கிக் கூறினர் எனவுணர்க.

கச்சித்தலத்தின் சிறப்பு

கச்சித்தலத்தின் சிறப்பென்பது;—காஞ்சி நகரத்தினது பெருமை. அது இந்நூலரங்கேற்றிய நகரமாகையால் இனி பின்னரும் எடுத்தாளும் பொருட்டு முன் விகட சக்ர விநாயகனை வணங்கிக்கொண்டதுபோல இங்கே காலம், களன், காரணம் ஆகிய மூன்றையுங் குறிக்க வேண்டி ஆக்கியோன் பெயருக்கும் நூற் பெயருக்கும் பின் வைத்துக் கூறினார்.

வேறு

மெச்சுந் தரங்கக் கடலுலகின் மிளிருந் தலங்கண் மிகவெனினு
மிச்சித் தவர்தங் குறைவெயின்முன் னிமம்போற் கடிதற் கியலாவே
பச்சை வண்ணத் திருமாலும் பவள வண்ணச் சோதியும்வாழ்
கச்சித் தலத்தைப் புரையுமெனக் கழறத் தலங்கள் காணேமால்.⁠ (3)

(இ-ள்.) தரங்கக் கடலுலகில் - அலைகள் பொருந்திய சமுத்திரஞ் சூழ்ந்த இவ்வுலகத்தில், மிளிரும் தலங்கள் மிகஎனினும் - விளங்கும் க்ஷேத்திரங்கள் பல என்று சொல்லினும், இச்சித்தவர் தங்குறை - இச்சித்தவர்கள் தங்கள் குறைகளை, வெயில் முன் இமம்போல் கடிதற்கு இயலா- சூரியனானவன் தன் முன் உண்டாகும் பனியை நீக்குமாறுபோல விலக்குதற்கு முடியாது (ஆதலால்) பச்சை வண்ணத் திருமாலும் - மரகதவண்ணனாகிய விஷ்ணுவும், பவளவண்ணச் சோதியும் பவள வண்ணனாகிய சிவபெருமானும், வாழ் - வாழும், மெச்சும் கச்சித்தலத்தைப் புரையுமெனக் கழற - யாவருந் துதிக்கும் (இச்சித்தவர்கள் தங்கள் குறைகளைச் சூரியனானவன் தன் முன்னுண்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலை_எழுபது,_1947.pdf/52&oldid=1861833" இலிருந்து மீள்விக்கப்பட்டது