உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிலை எழுபது, 1947.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



சிலை யெழுபது

43

படைத்தான்” என்றார். இதைக் குமரகுருபரசுவாமிகள் அருளிய நீதிநெறி விளக்கம்.

“இகழி நிகழ்ந்தாங் கிறைமக னொன்று
புகழினு மொக்கப் புகழ்ப— இகன்மன்னன்
சீர்வழிப் பட்டதே மன்பதைமற் றென்செய்யும்
நீர்வழிப் பட்ட புணை”

என்னும் ௪௪-வது பாட்டிற்காண்க. அன்றியும் மனு ஸ்மிருதி எ-வது அத்தியாயம் அரசன் சிறப்பு ; அரசன் சிறுவனாயிருந்தபோதிலும் அவனை மனிதனென்று அவமானஞ் செய்யக்கூடாது; ஏனெனில் மேலான தேவர்களின் கூட்டமே அந்த அரசன் உறவாயிருக்கிறதல்லவா? என்னும் ௮ - வது சுலோகத்தின்கீழ் அக்கினியானது அஜாக்கிரதையாய்த் தன்கிட்ட வந்தவனை மாத்திரந் தகிக்கும்; அரசனாகிற அக்கினி கோபித்துக் கொண்டால் தனம்தான்யம் புத்ர மித்ர களத்ராதிகளோடும் அழித்துப் போடும் என்னும் ௯-வது சுலோகத்தானும், அவ்வரசன் காரியா காரியங்களையும் தன் சக்தியையும் தேசகாலங்களையும் நன்றாக யோசித்துத் தரும சித்தியின் பொருட்டு அநேக ரூபத்தை எடுத்துக் கொள்ளுகிறான். அதாவது தனக்குப் பலவீன காலத்தில் அடங்கி இருப்பான் பலமுள்ள போது போர்க்கு வருவான் என்னும் ௧௦-வது சுலோகத்தாலும்; எந்த அரசன் தயையினால் பொருளும் சத்ரு ஜெயமும் உண்டாகிறதோ, அவன் தேஜோரூபனல்லவா? ஆதலால் பொருளை விரும்பினவனும் சத்துரு ஜெயத்தை விரும்பினவனும் ஜீவித்திருப்பதை விரும்பினவனும் அவனை எதிர்க்கக் கூடாது என்னும் ௧௧-வது சுலோகத்தானும்; அவ்வரசனோடு எவன் புத்தியில்லாமையால் துவேஷித்துக் கொள்ளுகிறானோ அவன் தானாகவே அழிந்து போகிறான், அரசனும் அவன் அழிகிறதைக் குறித்து யோசிக்கிறான் என்னும் ௧௨ - வது சுலோகத்தானும்; ஆதலால் அவ்வரசன் எதை அனுஷ்டிக்கும்படியாயும் நீக்கும்படியாயும் ஏற்பாடு செய்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலை_எழுபது,_1947.pdf/55&oldid=1863055" இலிருந்து மீள்விக்கப்பட்டது